கேரள அணைகள் நிரம்பின: 'இடுக்கி' திறப்பு

கேரள அணைகள் நிரம்பின: 'இடுக்கி' திறப்பு

1 mins read
d99a144f-f07a-4949-bf05-eef37668d5bd
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் நீடித்து வரும் கன­ம­ழை­யால் அம்­மா­நி­லம் பெரும் சேதங்­களை எதிர்­கொண்­டுள்ள நிலை­யில், அங்­குள்ள இடுக்கி அணை நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு திறக்­கப்­பட்­டுள்­ளது.

அந்த அணை முழு­மை­யாக நிரம்­பி­யதை அடுத்து தண்­ணீர் திறந்­து­வி­டப்­பட்­டது.

பத்­த­னம்­திட்டா, இடுக்கி, திருச்­சூர் மாவட்­டங்­களில் உள்ள பத்து முக்­கிய அணை­கள் முழு கொள்­ள­ளவை எட்­டி­யுள்­ள­தா­க­வும் அவற்­றின் கரை­யோர பகு­தி­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் எட்டு அணை­க­ளுக்கு வெள்ள ஆபத்­தைக் குறிக்­கும் ஆரஞ்ச் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில் தென்­கி­ழக்கு அர­பிக் கட­லில் உரு­வான காற்­ற­ழுத்த தாழ்வு நிலை கார­ண­மாக கேர­ளா­வில் பர­வ­லாக மழை பெய்து வரு­கிறது. அங்கு மொத்­த­முள்ள 14 மாவட்­டங்­களில் 11 மாவட்­டங்­கள் மழை­யால் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நில அரசு தெரி­வித்­துள்­ளது.

மேலும், கோட்­ட­யம், இடுக்கி மாவட்­டங்­களில் நிலச்­ச­ரி­வு­களும் ஏற்­பட்­டுள்­ளன. பலி எண்­ணிக்கை 35ஆக அதி­க­ரித்­துள்­ளது.

மூன்று நாள்­க­ளுக்கு முன்பே இடுக்கி அணை­யின் நீர்­மட்­டம் முழுக் கொள்­ள­ளவை எட்­டி­விட்­டது. இதை­ய­டுத்து சுமார் நான்கு ஆண்­டு­க­ளுக்கு பிறகு அந்த அணை­யில் இருந்து தண்­ணீர் திறக்­கப்­பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் வரும் 24ஆம் தேதி வரை மழை நீடிக்­கும் என அறிவிக்கப்பட்டுள்­ளது.