ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக எச்சரிக்கை

பெங்­க­ளூரு: ஏரி, கால்­வாய்­களை ஆக்­கி­ர­மிக்­கும் கட்­டு­மான நிறு­வ­னங்­கள் மீது கடும் நட­வ­டிக்கை பாயும் என கர்­நா­டக முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை எச்­ச­ரித்­துள்­ளார்.

பெங்­க­ளூ­ரில் இத்­த­கைய ஆக்­கி­ர­மிப்­பு­கள் அதி­க­மாக உள்­ள­தாக அவர் கூறினார்.

"ஒவ்­வொரு முறை மழை பெய்­யும்­போ­தும் ஏரி, கால்­வாய் நீர் வெளி­யேறி குடி­யி­ருப்­புப் பகு­தி­க­ளுக்­குள் புகுந்து பெரும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­து­கிறது.

"சில கட்­டு­மான நிறு­வ­னங்­கள் ஏரி, கால்­வாயை ஆக்­கி­ர­மித்­துள்­ளன. அத்­த­கைய நிறு­வ­னங்­கள் மீது கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்," என்­றார் முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை.

பெங்­க­ளூரு மாந­க­ராட்சி, மின்­சார வினி­யோக நிறு­வ­னம், குடி­நீர் வடி­கால் வாரி­யம் ஆகி­ய­வற்­றுக்கு இடையே போதிய ஒருங்­கி­ணைப்பு இல்­லா­ததே ஏரி, குளங்­கள் ஆக்­கி­ர­மிப்­புக்கு முக்­கிய கார­ணம் என்று குறிப்­பிட்ட முதல்­வர், பல இடங்­களில் பொது­மக்­களும் கூட ஆக்­கி­ர­மிப்பு செய்­துள்­ள­தாக தெரி­வித்­தார்.

"கால்­வாய்­களில் அதி­க­ள­வில் தூர் நிரம்­பி­யுள்­ளன. கால்­வாய்­களில் மழை­நீர் தடை­யின்றி சென்று ஏரி­களை அடைந்­தால் சிக்­கல் இருக்­காது. முத­லில் தூர்­வா­ரிய பின் கால்­வாய்­களை அக­லப்­ப­டுத்த வேண்­டும்," என்­றார் முதல்­வர் பசவராஜ் பொம்மை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!