உத்தரகாண்ட்: தொடர் மழையால் பெருத்த சேதம்

பலி எண்ணிக்கை 48ஐ எட்டியது; வீடுகளை இழந்து மக்கள் தவிப்பு

டேரா­டூன்: உத்­த­ர­காண்­டில் கடந்த ஆறு நாட்­க­ளா­கப் பெய்து வரும் கன­ம­ழை­யால் சாலை­களில் வெள்­ளம் கரை­பு­ரண்டு ஓடு­கிறது. மாநி­லத்­தின் பல இடங்­களில் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்டு மக்­கள் இரு­ளில் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. அம்­மா­நி­லத்­தின் பல பகு­தி­களில் வெள்­ளம் சூழ்ந்­துள்­ளது. கன­ம­ழை­யால் அணை­க­ளின் நீர்­வ­ரத்து அதி­க­ரித்து ஆறு­களில் வெள்­ளம் கட்­டுக்­க­டங்­கா­மல் பெருக்­கெ­டுத்து ஓடு­கிறது.

ஆறு­களை ஒட்டி கட்­டப்­பட்­டி­ருந்த வீடு­கள் பல நீரில் அடித்­துச்­செல்­லப்­பட்­டன. பல இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளது. மழை­யால் ஏரா­ள­மான கட்­ட­டங்­கள் இடிந்து விழுந்­துள்­ளன. அந்­தக் கட்­ட­டங்­க­ளின் இடி­பா­டு­களில் சிக்­கி­யுள்­ள­வர்­களை மீட்­கும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

மேலும், வெளி மாநி­லங்­களில் இருந்து அங்கு சுற்­றுப்­ப­ய­ணம் சென்­றோர் அங்­கி­ருந்து தங்­கள் சொந்த ஊருக்­குத் திரும்ப முடி­யா­மல் தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. நிலச்­ச­ரி­வில் சிக்­கிக்­கொண்­டி­ருப்­ப­வர்­களை மீட்­கும் பணி முடுக்­கி­வி­டப்­பட்­டுள்­ளது. சாலை­களும் பாலங்­களும் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ள­தால் மீட்­புப்­ப­ணி­யைச் சரி­வ­ரச் செய்­ய­மு­டி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. அங்கு மழை, வெள்­ளம், நிலச்­ச­ரிவு போன்­ற­வற்­றுக்­குப் பலி­யா­னோர் எண்­ணிக்கை 48ஐ எட்­டி­யுள்­ளது, பல­ரைக் காண­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்­நி­லை­யில், கன­ம­ழைக்கு உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­திற்கு தலா ரூ. 4 லட்­சம் இழப்­பீ­டும் வீடு­களை இழந்­தோ­ருக்கு 1,90,000 ரூபா­யும் வழங்­கப்­படும் என்று அம்­மா­நில முதல்­வர் புஷ்­கர் சிங் அறி­வித்­துள்­ளார்.

இத­னி­டையே ஹெலி­காப்­டர் மூலம் வெள்ளச் சேதங்­களை பார்­வை­யிட்ட உத்­த­ர­காண்ட் முத­ல­மைச்­சர், விவ­சா­யி­க­ளுக்கு உரிய இழப்­பீடு தரப்­படும் என உறுதி அளித்­துள்­ளார். தொடர்ந்து, இந்திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, இன்று உத்­த­ர­காண்ட் சென்று அங்­குள்ள நிலைமை குறித்து ஆய்வு மேற்­கொள்­கி­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!