குஷிநகரில் அனைத்துலக விமான நிலையம்

குஷிநகரில் அனைத்துலக விமான நிலையம்

2 mins read
37f5d949-f8f3-442a-b825-439e007b2774
உத்தர பிரதேச மாநிலத்தின் குஷிநகரின் புதிய அனைத்துலக விமான நிலையத் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இலங்கைப் பிரதமரின் மகனும் அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்சே, தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதை புத்தகத்தின் முதல் பிரதியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார். படம்: டுவிட்டர் -

புது­டெல்லி: உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், குஷி­ந­க­ரில் புத்­தர் வீடுபேறு பெற்ற (ஞானம் பெற்ற) இடத்­தைப் பார்­வை­யி­டு­வ­தற்­காக வரும் வெளி­நாட்­டுப் பய­ணி­க­ளின் வச­திக்­காக அனைத்­து­லக விமான நிலை­யம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

குஷி­ந­கர் விமான நிலை­யம் இந்­திய விமான நிலைய ஆணை­யத்­தால் 260 கோடி ரூபாய் செல­வில் 3,600 சதுர மீட்­டர் பரப்­ப­ள­வில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இது இந்­தி­யா­வின் 29வது அனைத்­து­லக விமான நிலை­ய­மா­கும். இந்த விமான நிலை­யத்தை பிர­த­மர் மோடி நேற்று திறந்து வைத்­தார்.

குஷி நகர் விமான நிலை­யத்­தில், முதல் விமா­ன­மாக கொழும்­பில் இருந்து வந்த விமா­னத்­தில் இலங்­கைப் பிர­த­மர் மகிந்த ராஜ­பக்சே மக­னும், இலங்கை விளை­யாட்­டுத் துறை அமைச்­ச­ரு­மான நமல் ராஜ­பக்சே தலை­மை­யில் புத்த மதத் துற­வி­கள் வந்­தி­றங்கி திறப்பு விழா நிகழ்ச்­சி­யில் சிறப்பு விருந்­தி­னர்­க­ளா­கக் கலந்­து­கொண்­ட­னர்.

இந்த நிகழ்ச்­சி­யில் பேசிய பிர­த­மர் மோடி, மக்­க­ளின் பல ஆண்டு எதிர்­பார்ப்­பு­கள் நிறை­வேறி உள்­ள­தாக கூறி­னார். வர்த்­த­கம் மற்­றும் தொழில்­து­றை­யின் வளர்ச்­சிக்கு இந்த விமான நிலை­யம் மேலும் புத்­து­ணர்ச்சி அளிக்­கும் என்று அவர் தெரி­வித்­தார்.

இந்த விமான நிலை­யத்தை புத்த மதத்­த­வர்­க­ளுக்­காக அர்ப்­ப­ணிப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

இதன் மூலம் சுற்­று­லாத்­துறை மேலும் மேம்­படும் என்­றும் அந்த மாநி­லத்­தின் பிற்­ப­டுத்­தப்­பட்ட பகு­தி­யான பூர்­வாஞ்­சல் பகு­தி­யின் வளர்ச்­சிக்கு இந்த புதிய விமான நிலை­யம் முக்­கிய பங்­காற்­றும் என்­றும் பிர­த­மர் மோடி கூறி­னார்.

மேலும் அவர், "இந்­தி­யா­வின் விமா­னப் போக்­கு­வ­ரத்தை தொழில்­முறை திற­னு­டன் நடத்­த­வும், பய­ணி­க­ளுக்­குக் கூடு­தல் வச­தி­க­ளு­டன் கூடிய பாது­காப்­பான பய­ணத்தை வழங்­க­வுமே ஏர் இந்­தி­யாவை தனி­யா­ருக்கு விற்­கும் முடிவு எடுக்­கப்­பட்­டது," என்று கூறி­னார்.

"இந்­தி­யா­வின் சிவில் விமானப் போக்­கு­வ­ரத்­திற்கு இந்த முடிவு புதிய ஊக்­கம் அளிக்­கும். இந்­தி­யா­வில் 200 ஹெலி­போர்ட்­கள் மற்­றும் விமான நிலை­யங்­களை இணைக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளோம்.

"சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு பாது­காப்­பான இட­மாக இந்­தியா திகழ்­கிறது. இந்த விமான நிலை­யம், தொழி­லா­ளர் முதல் தொழி­ல­தி­பர் வரை அனை­வ­ருக்­கும் பய­ன­ளிக்­கும்," என்று பிர­த­மர் மோடி கூறி­னார்.