கேரள மோசடி மன்னன் மான்சோன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு

கேரள மோசடி மன்னன் மான்சோன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு

1 mins read
70ca6f29-b8df-4e47-a128-7dad83cf769c
கேரள மாநிலத்தின் குற்றத் தடுப்புப் போலிசார், மோசடி மன்னன் மான்சோன் மவுங்கலை, கல்லூர் என்னுமிடத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து விசாரணைக்காக அழைத்துச்செல்கின்றனர். படம்: இபிஎஸ் -

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லத்­தின் எர்­ணா­கு­ளத்­தில் பழங்­கால கலைப்­பொ­ரு­ருட்­கள் விற்­பனை செய்­யும் அருங்­காட்­சி­ய­கம் நடத்தி வந்­தார் மான்­சோன் மாவுங்­கல் என்­ப­வர். அர­சி­யல்­வா­தி­க­ளி­ட­மும் அர­சாங்க அதி­கா­ரி­க­ளி­டமும் நன்கு அறி­மு­க­மா­ன­வ­ராக விளங்கி வந்­தார்.

இந்­நி­லை­யில், கேரள தொழி­ல­தி­பர்­கள் சிலர், மான்­சோன், பழ­மை­யான பொருட்­கள் என்று கூறி போலி­யா­ன­வற்றை தங்­க­ளி­டம் விற்று ஏமாற்­றி­ய­தாக அம்­மா­நில முதல்­வர் பின­ரா­யி­டம் புகார் அளித்­துள்­ள­னர். இதை­ய­டுத்து விசா­ரணை மேற்­கொண்ட போலிஸ் அதி­கா­ரி­கள் மான்­சோனை அண்­மை­யில் கைது செய்­த­னர். அதன்­பின்­னர், அவர் மீது பலர் மோச­டிப் புகார்­களை அளிக்­கத் தொடங்­கி­னர். அதை­ய­டுத்து, அவர் மீது ஏரா­ள­மான வழக்­கு­கள் பதி­வாகி வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், அவர் மீது புதி­தாக ஒரு பாலி­யல் புகாரை தெரி­வித்­துள்­ளார் 17 வய­துச் சிறுமி ஒரு­வர். இவர், மான்­சோன் நடத்­தும் அருங்­காட்­சி­ய­கத்­தில் பணி­யாற்­றி­வ­ரும் ஓர் ஊழி­ய­ரின் மக­ளா­வார். தனது கல்­விச் செல­வுக்கு உத­வு­வ­தா­கக் கூறி, இரண்டு ஆண்­டு­க­ளாக மான்­சோன், தன்னை பாலி­யல் துன்­பு­றுத்­தல் செய்து வந்­த­தாக அச்­சி­றுமி புகா­ரில் கூறி­யுள்­ளார்.

இந்­தப் பாலி­யல் துன்­பு­றுத்­தல் புகா­ரை­ய­டுத்து மான்­சோன் மாவுங்­கல் மீது போக்சோ சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் வழக்குப் பதி­வு­செய்­யப்­பட்டு விசா­ரணை நடந்­து­வ­ரு­கிறது.