போதைப் போருள் வழக்கில் கைதான ஆர்யன் கான் அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன்கான் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆர்யன் கான் சார்பில் பிணைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்க மறுப்புத் தெரிவித்தது. மேலும், அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார்.
இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி ஆர்யன் கான் உள்ளிட்டோர் இரண்டாவது முறையாக மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஆர்யன்கான், அர்பாஸ் மெர்சண்ட் மற்றும் முன்முன் தமேச்சா ஆகியோருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து விட்டது.

