பிரியங்கா: கைது செய்வதில் முனைப்பாக உள்ளனர்

பிரியங்கா: கைது செய்வதில் முனைப்பாக உள்ளனர்

1 mins read
0a518441-1627-4275-a69e-a2ab4aa0b159
-

லக்னோ: தம்­மைக் கைது செய்ய வேண்­டும் என்­ப­தி­லேயே உத்­த­ரப் பிர­தேச காவல்­துறை முனைப்­பாக உள்­ளது என காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர் பிரி­யங்கா காந்தி தெரி­வித்­துள்­ளார்.

போலிஸ் காவ­லில் இருந்த துப்­பு­ர­வுத் தொழி­லாளி அருண் வால்­மீகி என்­ப­வர் மர்­ம­மான முறை­யில் இறந்­துள்­ளார். இதை­ய­டுத்து அவ­ரது குடும்­பத்­தா­ரைச் சந்­தித்து ஆறு­தல் கூறச் சென்ற பிரி­யங்­காவை காவல்­து­றை­யி­னர் தடுத்து நிறுத்­தி­னர்.

நெடுஞ்­சா­லை­யில் அவ­ரது கார் நிறுத்­தப்­பட்ட சில நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு அவ­ரைக் கைது செய்­வ­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

144 தடை உத்­த­ரவு அம­லில் இருப்­ப­தால் ஆக்ரா நக­ருக்­குள் நுழைய அனு­ம­திக்க இய­லாது என்­றும் அவ­ரைக் காவல் நிலை­யத்­துக்கு அழைத்­துச் செல்­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பிரி­யங்கா, தாம் கட்சி அலு­வ­ல­கத்­தைத் தவிர வேறு எந்த இடத்­திற்­குச் செல்ல முயன்­றா­லும் காவல்­துறை தடுத்து நிறுத்­து­வ­தா­கச் சாடி­னார்.

"அரசு நிர்­வா­கம் என்­னைத் தடுக்க முயற்சி செய்­கிறது. இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளால் பொது­மக்­க­ளுக்கு நிறைய சிர­மம் ஏற்­ப­டு­கிறது" என்­றார் பிரி­யங்கா.

மேலும், "நான் பாதிக்­கப்­பட்­ட­வர்­களைச் சந்­திக்­கச் சென்­றால் மாநில அரசு ஏன் பயப்­ப­டு­கிறது? நான் ஏன் தடுக்­கப்­ப­டு­கி­றேன்?" என்­றும் அவர் கேள்வி எழுப்­பி­னார்.