எல்லையில் இந்திய ராணுவம் தீவிர போர்ப் பயிற்சி: சீனாவுக்குப் பதிலடி

இடா­ந­கர்: அரு­ணாச்­ச­லப் பிர­தே­சத்தை ஒட்­டி­யுள்ள எல்­லைப் பகு­தி­யில் இந்­திய ராணு­வத்­தி­னர் போர்ப் பயிற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

வீரர்­கள் தீவி­ரப் பயிற்சி மேற்­கொள்­ளும் காணொ­ளிப்­ப­தி­வு­கள் சமூக வலைத்­தளங்­களில் பகி­ரப்­பட்­டதை அடுத்து பர­ப­ரப்பு நில­வு­கிறது.

கடந்த சில தினங்­க­ளாக சீன ராணு­வம் தனது வீரர்­களை எல்­லை­யில் குவித்து வரு­வதை அடுத்து, இந்­தி­யா­வும் அதே போன்ற நட­வ­டிக்­கையை மேற்­கொண்டு பதி­லடி கொடுத்­துள்­ளது.

'எஸ்-70' ரக ஏவு­க­ணை­களை இந்­திய ராணு­வம் எல்­லை­யில் குவித்­தி­ருப்­ப­தாக கூறப்­படும் நிலை­யில், இந்­திய வீரர்­கள் ராணு­வப் பயிற்சி மட்­டு­மல்­லா­மல், தியா­னம், யோகா பயிற்­சி­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

எல்­லைப் பகு­தி­யில் தொடர்ந்து அத்­து­மீறி ஊடு­ரு­வும் சீன ராணு­வம், ஒப்­பந்­தங்­களை மீறி சாலை­கள், முகாம்­களை அமைப்­ப­து­டன் வீரர்­களை­யும் பெரு­ம­ள­வில் குவித்து வரு­கிறது.

சீனா­வின் இந்­தப் போக்கு கவலை அளிப்­ப­தாக இந்­திய ராணு­வத் தலை­மைத் தள­பதி கவலை தெரி­வித்­துள்­ளார். எனி­னும், எத்­த­கைய சவா­லை­யும் ஊடு­ரு­வ­லை­யும் சந்­திக்க இந்­திய ராணு­வம் தயா­ராக இருப்­ப­தா­க­வும் அவர் அறி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, அரு­ணாச்­ச­லப் பிர­தேச எல்­லை­யில் கிழக்கு பகுதி ராணு­வத் தள­பதி மனோஜ் பாண்டே நேற்று முன்­தி­னம் ஆய்வு மேற்­கொண்­டார். பின்­னர், செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், அசல் எல்­லைக் கட்­டுப்­பாட்டு கோட்­டுப் பகு­தி­யில் கண்­கா­ணிப்பை தீவி­ரப்­படுத்தி உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"எந்­த­வொரு சவா­லை­யும் சமா­ளிக்­கும் திறன் நம்­மி­டம் இருக்­கிறது. சுற்­றுக்­கா­வல் பணியை மேற்­கொள்­வ­தில் அதிக மாற்­றம் செய்­ய­வில்லை. சில பகு­தி­களில் அந்­தப் பணி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கு லடாக் பகு­தி­யைத் தொடர்ந்து அரு­ணாச்­ச­லப் பிர­தே­சத்தை ஒட்­டிய எல்­லைப் பகு­தி­யி­லும் சீனப்­ப­டை­கள் குவிக்­கப்­பட்டு வரு­கின்­றன. இது கவ­லை­ய­ளிக்­கிறது," என்­றார் மனோஜ் பாண்டே.

இந்­திய ராணு­வத்­தி­டம் சிறந்த கண்­கா­ணிப்பு ரேடார்­கள், தக­வல் தொடர்பு அமைப்­பு­கள் உள்­ள­தாக குறிப்­பிட்ட அவர், சுற்­றுக்­கா­வல் பணி­யில் ஆளில்லா சிறிய ரக வானூர்­தி­களும் பயன்­ப­டுத்­தப்­படும் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!