முதன்மைப் பாடம் இந்தி: பிற மொழிகளைப் புறக்கணித்த சிபிஎஸ்இ

புது­டெல்லி: இந்தி மொழிக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­வது மீண்­டும் சர்ச்­சை­யாகி உள்­ளது. சிபி­எஸ்இ பாடத்­திட்­டத்­தி­லும் தேர்­வி­லும் இந்தி மொழி முதன்­மைப் பாட­மாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஆனால் தமிழ் உள்­ளிட்ட மாநில மொழி­களும் அயல்­நாட்டு மொழி­களும் துணைப் பாடங்­க­ளாக வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இதற்­குப் பல்­வேறு தரப்­பி­ன­ரும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

பத்து, பனி­ரெண்­டாம் வகுப்­பு­களுக்­கான முதல் பரு­வத் தேர்வு அடுத்த மாதம் நடை­பெற உள்­ள­தாக சிபி­எஸ்இ நிர்­வா­கம் அறி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், முதன்மை, துணைப் பாடங்­கள் என பிரித்து தேர்வு அட்­ட­வ­ணை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. சிபி­எஸ்இ இவ்வாறு அட்டவணை வெளியிடுவது இதுவே முதன்­மு­றை­யா­கும்.

அட்­ட­வ­ணை­யில் இந்­தி­யும் ஆங்­கி­ல­மும் முதன்­மைப் பாடங்­க­ளாக குறிப்­பிட்­டுள்­ளன. தமிழ், மலை­யா­ளம், தெலுங்கு, பஞ்­சாபி உள்­ளிட்ட மாநில மொழி­களும் அயல்­நாட்டு மொழி­களும் துணைப் பாடங்­க­ளுக்­கான பிரி­வில் இடம்­பெற்­றுள்­ளன.

இதன் மூலம் பாடத் திட்­டத்­திலும் தேர்­வி­லும் இந்­தியை மட்­டும் மத்­திய அரசு முன்­னி­லைப்­ப­டுத்தி உள்­ள­தாக மொழி, சமூக ஆர்­வ­லர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

சிபி­எஸ்இ நிர்­வா­கத்­தின் இந்த தன்­னிச்­சை­யான முடிவு கூட்­டாட்சித் தத்­து­வ­த்திற்கு எதி­ரா­னது என்று பஞ்­சாப் முதல்­வர் சரண்­ஜித் சன்னி டுவிட்­ட­ரில் பதி­விட்­டுள்­ளார்.

பஞ்­சாப் இளை­யர்­கள் தங்­கள் தாய்மொழியைப் படிப்­ப­தற்­கான அடிப்படை உரிமை பறிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தமது பதி­வில் அவர் சாடி உள்­ளார்.

இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளின் மூலம் மத்­திய அரசு தொடர்ந்து மாநில மொழி­களை புறக்­க­ணிப்­ப­தா­க­வும் இதை ஏற்க இய­லாது என­வும் பலர் சமூக வலைத்­த­ளங்­களில் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து மத்திய அரசு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!