மூச்சுப் பிரச்சினை: பெங்களூரில் அதிகரிக்கும் நோயாளிகள்

தீவிர சிகிச்சைப் பிரிவில் பச்சிளம் குழந்தைகளும் அனுமதி

பெங்­க­ளூரு: மூச்­சுப் பிரச்­சினை கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை பெங்­க­ளூ­ரில் அதி­க­ரித்து வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

ஒரு பில்­லி­யன் தடுப்­பூ­சி­களை போட்டு இந்­தியா சாதனை படைத்­துள்ள நிலை­யில், கொரோனா தொற்­றுப் பர­வல் தடுப்பு நட­வடிக்கை­கள் நல்ல பலன்­க­ளைத் தந்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், கர்­நா­டக மாநி­லத் தலை­ந­கர் பெங்களூ­ரில் புதிய பிரச்­சினை தலை­தூக்கி உள்­ளது. அங்கு திடீ­ரென மூச்­சுப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. பலர் மூச்­சுக்­கு­ழல் அழற்சி கார­ண­மாக மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். இத­னால் தீவிர சிகிச்சைப்பிரி­வில் உள்ள படுக்­கை­கள் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

பெரி­ய­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் பச்­சி­ளம் குழந்­தை­க­ளுக்­கும் இந்­தப் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தாக வெளி­யான தக­வல் மக்­கள் மத்­தி­யில் அச் சத்தை­யும் கவ­லை­யை­யும் ஏற்­படுத்தி உள்­ளது.

பிறந்து இரு மாதங்­கள் அல்­லது இரண்டு ஆண்­டு­களே ஆன குழந்தை­கள் சில­ருக்கு நெஞ்­சுத்­தொற்று, நிமோ­னியா, வேக­மாக மூச்­சு­விடு­தல் உள்­ளிட்ட பிரச்­சி­னை­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. இத­னால் அக்­கு­ழந்­தை­களும் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

குழந்­தை­கள் மூச்­சு­விட சிர­மப்­பட்­டால் சளி, இரு­மல் ஆகியவை­தான் அதற்­குக் கார­ணம் என்று நினைத்­து­வி­டா­மல் உட­ன­டி­யாக மருத்­து­வரைச் சந்­திக்­க வேண்­டும் என அறி­வு­றுத்­து­கி­றார் கொலம்­பியா - ஆசியா மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்­றும் குழந்­தை­கள் நல மருத்­து­வர் சுப்ரஜா சந்­தி­ர­சே­கர்.

ஒரு வய­துக்­கும் கீழ் உள்ள குழந்­தை­கள், ஒரு நிமி­டத்­துக்கு 60 முறைக்­கும் அதி­க­மாக மூச்சு விட்­டாலோ, ஐந்து வய­துக்­குட்­பட்ட குழந்தை ஒரு நிமி­டத்­துக்கு 40 முறைக்­கும் அதி­க­மாக மூச்சு விட்­டாலோ, ஐந்து வய­துக்கு மேற்­பட்ட குழந்­தை­யாக இருந்து ஒரு நிமி­டத்­துக்கு 30 முறைக்­கும் மேல் மூச்சு விட்­டாலோ, உட­ன­டி­யாக மருத்­து­வரைச் சந்­திக்க வேண்­டும் என்­பது அவ­சி­யம் என்­றும் மருத்து­வர்­கள் அறி­வு­றுத்­து­கின்­ற­னர்.

மூன்று நாள்­க­ளுக்­கும் மேலான காய்ச்­சல், தண்­ணீர்­கூட குடிக்க முடி­யா­மல் வாந்தி எடுத்­தால் உட­ன­டி­யாக மருத்­து­வ­ரைப் பார்ப்­பது நல்­லது என்­றும் கர்­நா­டக சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் கூறு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, நேற்று முன்தினம் புதி­தாக 15,786 பேருக்கு கொரோனா கிருமி தொற்­றி­யது உறு­தி­யாகி உள்­ளது. மேலும், 231 பேர் பலி­யா­கி­விட்­ட­னர். தற்­போது 175, 745 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

தலை­ந­கர் டெல்­லி­யில் நேற்று முன்­தி­னம் தொற்­றுப் பாதிப்­பால் இறப்­பு­கள் ஏதும் பதி­வா­க­வில்லை. கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 8,733 பேருக்கு கிருமி தொற்­றி­ய­தா­க­வும் 118 பேர் பலியாகி விட்­ட­தா­க­வும் அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

கர்­நா­ட­கா­வில் நிலைமை கட்­டுக்­குள் உள்­ளது. நேற்று முன்­தி­னம் அங்கு 365 பேருக்கு கொரோனா தொற்­றுப்பாதிப்பு இருப்­பது உறு­தி­யா­னது. இதே­வே­ளை­யில் மகா­ராஷ்­டி­ரா­வில் புதி­தாக 1,573 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!