தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராணுவத் தளவாட ஏற்றுமதி: 25 முன்னணி நாடுகளின் பட்டியலில் இந்தியா

1 mins read
bee9880d-2e60-4f5b-9cef-58f86cbbcf0c
-

புது­டெல்லி: ராணுவத் தள­வாட ஏற்று­ம­தியை ஊக்­கு­விக்க மத்­திய அரசு பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் தெரி­வித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், ராணுவத் தள­வா­டங்­கள் ஏற்­று­மதி செய்­யும் 25 முன்­னணி நாடு­கள் பட்­டி­ய­லில் இந்­தியா முதல் முறை­யாக இடம்­பெற்­றுள்­ளது என்­றும் இது நாட்­டின் பாது­காப்­புத் திறன் அதி­க­ரித்­துள்­ளது என்­ப­தற்­கான சான்று என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

ஸ்டாக்­ஹோம் அனைத்­து­லக அமைதி ஆராய்ச்சி மையம் 2020ம் ஆண்டு வெளி­யிட்ட அறிக்­கை­யில் இந்­தியா அடைந்­துள்ள இந்த முன்­னேற்­றம் பற்றி குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது என்­றும் இது பெரு­மைக்­கு­ரிய விஷ­யம் என்­றும் ராஜ்­நாத் சிங் குறிப்­பிட்­டுள்­ளார்.

விமா­னப்­படை பாது­காப்புத் தள­வாட ஏற்­று­ம­திக்கு ரூ.35 ஆயி­ரம் கோடி இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், எதிர்­வ­ரும் 2024-25க்குள் இந்த இலக்கு எட்­டப்­படும் என்­றும் தெரி­வித்­தார்.

வளர்ந்த நாடு­கள் மட்­டுமே ராணுவத் தள­வாட ஏற்­று­ம­தி­யில் முன்­ன­ணி­யில் இருந்த நிலை­யில், இந்­தி­யா­வும் அதில் சேர்ந்­துள்­ளது என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.