ஆயுளைக் குறைத்தது கொவிட்-19 பாதிப்பு

ஆயுளைக் குறைத்தது கொவிட்-19 பாதிப்பு

2 mins read
611a9814-c3a6-4891-8b38-10ecd37ce47e
-

மும்பை: கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லில் இந்­திய மக்­க­ளின் ஆயுட்­கா­லம் ஏறக்­கு­றைய ஈராண்­டு­கள் குறைந்­தி­ருக்­கிறது. மக்­கள்­தொகை ஆய்­வுக்­கான அனைத்­து­ல­கக் கழ­கத்­தைச் (ஐஐ­பி­எஸ்) சேர்ந்த விஞ்­ஞா­னி­கள் நடத்­திய புள்­ளி­வி­வர பகுப்­பாய்­வில் இது தெரி­ய­வந்­துள்­ளது.

"2019ல் ஆண்­கள், பெண்­க­ளின் ஆயுட்­கா­லம் முறையே 69.5 மற்­றும் 72 ஆண்­டு­க­ளாக இருந்­தன.

"2020ல் இது 67.5 மற்­றும் 69.8 ஆண்­டு­க­ளா­கக் குறைந்­தது," என்று ஐஐ­பி­எஸ் உத­விப் பேரா­சி­ரி­யர் சூர்­ய­காந்த் யாதவ் கூறி­னார்.

ஒப்­பு­நோக்க, அமெ­ரிக்கா, இங்கி லாந்து, வேல்ஸ் ஆகிய நாடு­களில் ஆயுட்­கா­லம் ஓராண்­டுக்­கு­மேல் குறைந்­தி­ருப்­ப­தா­க­வும் ஸ்பெ­யி­னில் அது 2.28 ஆண்­டு­கள் குறைந்­தி­ருப்­ப­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்­திய சுகா­தார அமைச்­சைப் பொறுத்­த­வரை, கடந்த ஆண்டு மார்ச் மாதத்­தில் இருந்து கொவிட்-19 கார­ண­மாக இந்­தி­யா­வில் ஏறக்­கு­றைய 450,000 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். ஆனால், உண்­மை­யான உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை மில்­லி­யன் கணக்­கில் இருக்­கும் என­வும் புள்­ளி­வி­வர நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.

"ஆயுட்­கா­லம் என வரும்­போது, கடந்த பத்து ஆண்­டு­களில் நாம் கண்­டுள்ள முன்­னேற்­றத்தை கொவிட்-19 பாதிப்பு அழித்­து­விட்­டது. பழைய நிலையை நாம் மீண்­டும் எட்ட பல ஆண்­டு­கள் தேவைப்­படும்," என்­றார் பேரா­சி­ரி­யர் யாதவ்.

இந்­தி­யா­வில் தற்­போது மனி­த­வாழ்க்­கை­யின் ஆயுட்­கா­லம் 2010ல் இருந்த நிலைக்­குச் சம­மாக உள்­ளது.

ஆயுட்­கா­லத்­தில் ஈராண்­டு­கள் குறைந்­தி­ருப்­பது சிறிய விஷ­யம் அல்ல என்­றார் பெயர் குறிப்­பிட விரும்­பாத நிபு­ணர் ஒரு­வர்.

இதற்­கி­டையே, இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் 16,326 பேருக்கு புதி­தா­கப் பாதிப்பு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­து­டன், ஒரே­நா­ளில் 666 பேர் உயி­ரி­ழந்து உள்­ள­னர் என்று மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.