புதுடெல்லி: நாட்டு மக்களுக்காக பிரதமர் மோடி தொலைக்காட்சி வழி உரையாற்றியபோது, பண்டிகை காலத்தில் கொரோனா போர் ஆயுதங்களை மறந்துவிடாதீர் என அறிவுறுத்தி உள்ளார்.
"கடந்த ஆண்டு இந்த பெருந்தொற்றால் தீபாவளி விழா களை கட்டவில்லை. ஆனால், இவ்வாண்டு 100 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் பண்டி கையும் களை கட்டியுள்ளது. அதேேபால் நம் பொருளாதார மும் உயர்ந்து வருகிறது.
"எனினும், கொரோனா வுக்கு எதிரான போர் இன்னும் முழுமையாக ஓயாததால், அதை எதிர்க்கும் ஆயுதமான முகக்கவசத்தை மக்கள் மறக்கவேண்டாம். சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்போம். தடுப்பூசி போட்டுக் கொள்வோம்," என்றார்.

