செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
d140a2de-53ce-4167-8aef-97ace6af8a82
-

11 மலையேறிகளின் உடல்கள் மீட்பு

உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை வெள்ளத்தில் சிக்கி மலையேற்றக் குழுவினர் எட்டுப் பேர் உள்பட 11 பேர் கடந்த 18ஆம் தேதி காணாமல் போயினர். அவர்களது உடல்களை விமானப்படையினர் தேடி மீட்டுள்ள னர். இதுவரை பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65ஆக அதிகரித்துள்ளது.

9 அணைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: அடுத்த நான்கு நாள்களுக்கு கேரள மாநிலத்தில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள ஒன்பது அணைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவது காரணமாக 40க்கும் ேமற்பட்டோர் பலியாகி உள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மிகப்பெரிய இடுக்கி அணை உள்பட பெரும்பாலான அணைகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்-அப் தகவல் தவறாக சித்திரிப்பு

புதுடெல்லி: போதைப்பொருள் வழக்கு தொடர்பில் தனது வாட்ஸ்-அப் உரையாடல்கள் தவறான முறையில் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார். சொகுசு கப்பல் போதை விருந்து வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஆர்யன் கான், பிணை கேட்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் எனது கைபேசியில் சேகரித்த வாட்ஸ்-அப் உரையாடல்களை தவறாக சித்திரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளவர், என் உரையாடல்களுக்கு அதிகாரிகள் கொடுக்கும் விளக்கம் கற்பனையானது. இத்தகைய விளக்கங்கள் தவறானது, நியாயமற்றது எனவும் ஆர்யன் கான் குறிப்பிட்டுள்ளார். இம்மனு வரும் 26ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

தீவிபத்து: 19வது மாடியில் இருந்து தப்பிக்க முயன்ற காவலாளி பலி

மும்பையின் பரேல் பகுதியிலுள்ள 61 மாடி குடியிருப்பின் 19வது மாடியில் வெள்ளியன்று தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த குடியிருப்பின் காவலாளி அருண் திவாரி, அந்த மாடிக்கு விரைந் தாா். அதன்பிறகு அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டவர், தீயில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ள பால்கனியில் இருந்து குதித்த போது உயிரிழந்தார். படம்: ஊடகம்