பெட்ரோல் விலை உயர்வுக்கு தவறான கொள்கையே காரணம்: ப. சிதம்பரம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு தவறான கொள்கையே காரணம்: ப. சிதம்பரம்

1 mins read
079ed17b-2d7f-4e80-9f5d-6ac80660b621
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் பெட்­ரோல், டீசல் விலை வர­லாறு காணாத அள­வுக்கு ஏறி­விட்­டது. நாடு முழு­வ­தும் பெட்­ரோல் விலை 100 ரூபா­யைத் தாண்­டி­விட்­டது. அதே­போல் முதல் முறை­யாக டீசல் விலை­யும் வர­லாறு காணாத அள­வுக்கு 100 ரூபாயைத் தாண்­டி­விட்­டது.

இத­னால் வாக­ன­மோட்­டி­கள் மிகுந்த கவ­லை­ய­டைந்­துள்­ள­னர். சம்­பா­திக்­கும் காசு, பெட்­ரோ­லுக்­குக் கொடுக்­கவே சரி­யாக இருக்­கிறது என்று பலர் புலம்­பு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் நாட்­டில் உயர்ந்­தி­ருக்­கும் பெட்­ரோல், டீசல் விலைக்கு மத்­திய அர­சின் தவ­றான வரிக்­கொள்­கையே கார­ணம் என்று முன்­னாள் மத்­திய நிதி­ய­மைச்­ச­ரும் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான ப.சிதம்­ப­ரம் கடு­மை­யாகச் சாடி­யுள்­ளார்.

சென்­னை­யில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்­றில் பேசிய ப.சிதம்­ப­ரம், "ஒரு லிட்­டர் பெட்­ரோல், டீசல் ரூ.100ஐ தாண்டி விற்­ப­னை­யா­கிறது. நடுத்­தர மக்­கள்கூட செலவு செய்ய முடி­யாது. ஒரு பேரல் கச்சா எண்­ணெய் விலை 145 டால­ராகக்கூட இருந்­துள்­ளது. அர­சின் தவ­றான வரிக்­கொள்­கையே இதற்கு கார­ணம்.

"வரி விதிப்பு என்­பது ஒரு எல்­லைக்­குள் மட்­டுமே இருக்க வேண்­டுமே தவிர, ஒரே பொரு­ளின் மீது 33% வரியை விதிப்­பது தவ­றா­னது. கொரோனா உள்­ளிட்ட பல கார­ணங்­க­ளால் உலக வர்த்­த­கம் முடங்­கி­யுள்­ளது. மக்­க­ளி­டம் கடன் சுமை அதி­க­ரித்­துள்­ளது. தனி­ம­னித சேமிப்பு குறைந்­துள்­ளது. இது அனைத்­தும் நாட்­டுக்கே விடுக்­கப்­பட்­டி­ருக்­கும் எச்­ச­ரிக்கை மணி­யா­கும்," என்­றார்.