ரூ.64,180 கோடி செலவில் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம்

ரூ.64,180 கோடி செலவில் சுகாதார உள்கட்டமைப்பு திட்டம்

2 mins read
5545e0f9-87cb-4388-8ffc-37e4a66038b4
உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கண்காட்சியைக் கண்டு ரசித்தார். படம்: ஊடகம் -

157 மருத்துவக் கல்லூரிகள் மூலம் 16,000 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உருவாகும்

லக்னோ: ஏழை­க­ளுக்கு அனைத்­து­வி­த­மான மருத்­துவ வச­தி­க­ளை­யும் செய்து கொடுப்­பதே மத்­திய அர­சின் நோக்­கம் எனப் பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

தற்­சார்பு ஆரோக்ய இந்­தியா திட்­டத்­தின் கீழ் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் ஒன்­பது புதிய மருத்து­வக் கல்­லூ­ரி­களை அவர் நேற்று தொடங்கி வைத்­தார்.

மேலும், நாடு முழு­வ­தும் சுகா­தார உள்­கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்த, 'பிர­தான் மந்­திரி ஆத்­ம­ நிர்­பார் ஸ்வஸ்த் பாரத் யோஜனா' திட்­டத்தை தொடங்கி வைத்த அவர், பொது சுகா­தா­ரம், தீவிர சிகிச்சைப் பிரி­வில் உட்­கட்­ட­மைப்பை மேம்­படுத்த இந்த திட்­டம் உத­வும் என்­றார்.

மொத்­தம் 64,180 கோடி ரூபாய் செல­வில் இந்த திட்­டம் செயல்­படுத்­தப்­பட உள்­ளது. அடுத்த ஆறு ஆண்­டு­களில் இத்­திட்­டத்­துக்­குரிய நிதி ஒதுக்­கப்­படும்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 2014ஆம் ஆண்டுக்கு முன் நாட்டில் 90 ஆயிரத்துக்கும் குறைவான மருத்துவ இடங்களே இருந்ததாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஏழு ஆண்டுகளில் 60 ஆயிரம் புதிய மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

"உத்­த­ரப் பிர­தே­சத்­தி­லும்­கூட 2017 வரை அரசு மருத்­து­வக் கல்­லூரி­களில் 1,900 மருத்­துவ இடங்­கள் மட்­டுமே இருந்­தன. கடந்த நான்கு ஆண்­டு­களில் மட்­டும் இரட்டை இஞ்­சின் அர­சால் மேலும் 1,900க்கும் அதிகமான இடங்­கள் உரு­வாகி உள்­ளன," என்­றார் பிர­த­மர் மோடி.

முந்­தைய அர­சு­கள் தேர்­தல் களத்­தில் வாக்­கு­க­ளைக் கருத்­தில் கொண்டு சில மருந்­த­கங்­கள் அல்­லது சிறிய மருத்­து­வ­ம­னை­கள் பற்­றிய அறி­விப்­பு­களை மட்­டும் வெளி­யிட்டு திருப்தி அடைந்­த­தாக அவர் குறிப்­பிட்­டார்.

"நீண்ட கால­மாக மருத்துவ­மனைகளின் கட்டடம் கட்­டப்­பட்­டி­ருக்­காது. மருத்­து­வக் கரு­வி­கள் இருக்­காது. இவை இரண்­டுமே இருந்­தா­லும் மருத்து­வர்­களோ இதர ஊழி­யர்­களோ இருக்­க­மாட்­டார்­கள். இப்படி குறைகள் இருந்தன.

"ஏழை மக்­க­ளி­டம் இருந்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான கோடி ரூபாய் எனும் ஊழல் சக்­க­ரம் ஓய்­வில்­லா­மல் 24 மணி­நே­ர­மும் சுழன்றுகொண்­டி­ருந்­தது," என்­றார் பிர­த­மர் மோடி.

தற்­சார்பு சுகா­தா­ரத் திட்­டத்­தின் கீழ் சுகா­தா­ரத்­திற்­கான ஒரு தேசிய கல்­விக்­க­ழ­கம், நுண்­கிருமி ஆய்­வுக்­கான நான்கு புதிய தேசிய கல்­விக்­க­ழ­கங்­கள், உலக சுகா­தார அமைப்­புக்­கான தென்­கி­ழக்கு ஆசிய வட்­டார மண்­டல ஆராய்ச்சி அமைப்பு, உயிரி பாது­காப்பு மூன்­றாம் நிலை­யில் ஒன்­பது பரி­சோ­த­னைக் கூடங்­கள், நோய் கட்­டுப்­பாட்­டுக்­கான ஐந்து புதிய மண்­டல தேசிய மையங்­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இதற்­கி­டையே, நாடு மு­ழு­வ­தும் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அனு­மதி வழங்­கப்­பட்ட 157 புதிய மருத்­து­வக் கல்­லூ­ரி­க­ளுக்­காக 17,691 கோடி ரூபாயை மத்­திய அரசு முத­லீடு செய்­துள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்­ச­கம் தெரி­வித்­துள்­ளது.

இக்­கல்­லூ­ரி­கள் செயல்­ப­டத் தொடங்­கும்­போது இளநிலை மருத்­து­வப்­ ப­டிப்­புக்­கான 16 ஆயிரம் இடங்­கள் உரு­வாக்­கப்­படும் என்று குறிப்­பிட்­டுள்ள அந்த அமைச்சு, ஏற்­கெ­னவே 64 புதிய மருத்­து­வக் கல்லூரி­கள் செயல்­ப­டத் தொடங்கி உள்­ள­தால், 6,500 இடங்­கள் முன்பே உரு­வாக்­கப்­பட்­டு உள்­ள­தா­கக் கூறி­யுள்­ளது.