எல்லைப் பாதுகாப்பு: புதுச்சட்டம் இயற்றிய சீனா

எல்லைப் பாதுகாப்பு: புதுச்சட்டம் இயற்றிய சீனா

2 mins read
7a901d76-c33a-4ab7-8ba4-33f4c8438f82
-

புது­டெல்லி: எல்­லைப் பாது­காப்பை பலப்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் சீனா புதிய சட்­டம் ஒன்றை இயற்றி உள்­ளது. இதன் மூலம் அண்டை நாடு­க­ளு­ட­னான எல்­லைப் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணப்­படும் என சீன அரசு தெரி­வித்­துள்­ளது.

லடாக், அரு­ணாச்­ச­லப் பிர­தேச எல்­லைப் பகு­தி­களில் இந்­தியா, சீனா இடையே அண்­மைக் கால­மாகப் பதற்­றம் நிலவி வரு­கிறது.

சீன ராணு­வத்­தி­னர் இந்­திய எல்­லைப் பகு­தி­யில் தொடர்ந்து ஊடு­ருவ முயற்சி செய்து வரு­கின்­ற­னர். ஒரு­முறை மோதல் தீவி­ர­ம­டைந்து இரு­த­ரப்­பும் தாக்­கிக்கொண்­ட­தில் உயி­ரி­ழப்­பும் ஏற்­பட்­டது.

இந்­நி­லை­யில், புதிய சட்­டத்தை இயற்றி உள்­ளது சீனா. அடுத்த ஆண்டு ஜன­வரி முதல் தேதி­யில் இருந்து புதிய சட்­டம் அம­லுக்கு வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எல்­லைப் பகு­தி­க­ளைப் பாது­காக்க உரிய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­றும் போர் அல்­லது பெரிய அள­வி­லான மோதல் ஏற்­பட்­டால் நாட்­டின் எல்­லை­களை மூட புதிய சட்­டம் வழி­வகை செய்­யும் என்­றும் சீன அரசு கூறி­யுள்­ளது.

இது தொடர்­பாக இந்­திய அர­சுத் தரப்­பில் இருந்து எந்­த­வித கருத்­தும் இது­வரை வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

காஷ்­மீர் நில­வ­ரம்:

இதற்­கி­டையே, காஷ்­மீ­ரில் பயங்­க­ர­வா­தத் தாக்­கு­தல்­கள் நீடிக்­கும் பட்­சத்­தில், அங்கு மீண்­டும் பாது­காப்பு கட்­டுப்­பா­டு­கள் அமல்­ப­டுத்­தப்­படும் என முப்­ப­டைத் தலை­வர் பிபின் ராவத் தெரி­வித்­துள்­ளார்.

அண்­மைக் கால­மாக காஷ்­மீ­ரில் உள்ள வெளி மாநி­லத் தொழி­லா­ளர்­க­ளை­யும் பொது­மக்­க­ளை­யும் பயங்­க­ர­வா­தி­கள் படு­கொலை செய்து வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், குறிப்­பிட்ட ஒரு பிரி­வி­னரை பயங்­க­ர­வா­தி­கள் தாக்கி வரு­வ­தா­க­வும் இதன் மூலம் காஷ்­மீ­ரில் பாகிஸ்­தான் ஆத­ர­வு­டன் மறை­முக போரை நடத்­து­வ­தா­க­வும் பிபின் ராவத் சாடி­யுள்­ளார்.

காஷ்­மீர் பள்­ளத்­தாக்­கில் இருந்து வெளி மாநி­லத்­த­வர்­கள் வெளி­யேற்­றப்­ப­டு­வதை அனு­ம­திக்க இய­லாது என்று குறிப்­பிட்ட அவர், பாது­காப்­புப் படை­யி­னர் நிலை­மை­யைக் கட்­டுக்­குள் கொண்டு வரு­வார்­கள் என்­றார்.