முல்லைப் பெரியாறு அணை: அதிகபட்ச தண்ணீரை திறந்துவிட தமிழக அரசுக்கு கேரளா கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை: அதிகபட்ச தண்ணீரை திறந்துவிட தமிழக அரசுக்கு கேரளா கோரிக்கை

2 mins read
648e90ae-6ade-4830-a3f5-02dc59b9223c
-

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் கன­மழை நீடித்து வரும் நிலை­யில், முல்­லைப்­பெ­ரி­யாறு அணை­யில் இருந்து அதி­க­பட்ச நீரை திறந்து விட வேண்­டும் என தமி­ழக முதல்­வர் மு.க. ஸ்டா­லி­னுக்கு கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் கடி­தம் எழுதி உள்­ளார்.

முல்­லைப் பெரி­யாறு அணை­யின் நீர்ப்­பி­டிப்­புப் பகு­தி­களில் நீடித்து வரும் கன­ம­ழை­யால் அணை­யின் நீர்­மட்­டம் மள­ம­ள­வென அதி­க­ரித்து வரு­கிறது. இதை­ய­டுத்து அணை­யின் நீர்­மட்­டம் 142 அடியை எட்­டி­வி­டக் கூடாது என்­ப­தற்­காக தமி­ழக அர­சி­டம் வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார் கேரள முதல்­வர்.

அந்த அணை­யில் 142 அடி வரை தண்­ணீரை தேக்கி வைக்­க­லாம் என தமி­ழக அரசு கூறி வரும் நிலை­யில், கேரளா அதற்­குக் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கிறது. இத­னால் இரு மாநி­லங்­க­ளுக்­கும் இடையே மோதல் நில­வு­கிறது. அணை­யின் பாது­காப்­புக்கு இரு அர­சு­களும் பொறுப்­பேற்­றுள்­ளன.

இந்­நி­லை­யில், முல்­லைப்­பெ­ரி­யாறு அணை­யில் இருந்து தமி­ழ­கப் பக்­கம் விநா­டிக்கு 1,750 கன­அடி தண்­ணீரை திருப்­பி­விட்ட பிற­கும், அணைக்கு நிகர நீர்­வ­ரத்து வினா­டிக்கு 2,109 கன அடி­யாக உள்­ளது என கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யன் தெரி­வித்­துள்­ளார்.

எனவே, தற்­போது 136.85 அடி­யாக உள்ள அணை­யின் நீர்­மட்­டம், மழை மேலும் தீவி­ரம் அடைந்­தால், 142 அடி­யாக உயர்ந்துவிடும் என்று அஞ்­சப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"அவ்­வா­றான நிலைமை ஏற்­பட்­டால் தமிழ்­நாட்­டுக்கு கால்­வாய் வழி­யாக படிப்­ப­டி­யாக தண்­ணீரைத் திறந்­து­விட வேண்­டிய அவ­சர தேவை ஏற்­படும். எனவே இப்­பி­ரச்­சி­னை­யில் தலை­யிட்டு, முல்­லைப்­பெ­ரி­யாறு அணை­யில் இருந்து அதி­க­பட்ச தண்­ணீரை கால்­வாய் வழி­யாக வைகை அணைக்குத் திறந்துவிடு­மாறு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு உட­னடி உத்­தரவு பிறப்­பிக்க வேண்­டும்," என தமி­ழக முதல்­வ­ருக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் பின­ராயி விஜ­யன் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

இதற்­கி­டையே கேர­ளா­வில் தொடர் மழை­யால் சில பகு­தி­களில் மீண்­டும் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளது.

கோட்­ட­யம், பட்­ட­னம்­திட்டா, திருச்­சூர், இடுக்கி உள்ள மாவட்­டங்­களில் மழை நீடித்து வரு­கிறது. பல மாவட்­டங்­க­ளுக்கு கன­ம­ழைக்­கான எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.