ஷாருக்கானிடம் பேரம் பேசிய அதிகாரிகள்: முக்கிய சாட்சி கூறிய தகவலால் திருப்பம்

மும்பை: ஆர்­யன் கான் மீதான போதைப்­பொ­ருள் வழக்கு தொடர்­பில் அவ­ரது தந்­தை­யும் நடி­க­ரு­மான ஷாருக்­கா­னி­டம் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் 25 கோடி ரூபாய் பேரம் பேசி­ய­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

தனி­யார் புல­னாய்­வா­ளர் கே.பி.கோசவி, அவ­ரது உத­வி­யா­ளர் பிர­பா­கர் செயில் ஆகிய இரு­வ­ரும் இந்த வழக்­கில் சாட்­சி­க­ளாக சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், மும்­பை­யில் செய்தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பிரபா­கர், இக்­குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்­ளார். அதி­கா­ரி­கள் தம்­மி­டம் பத்து வெற்று காகி­தங்­களில் கையெ­ழுத்து வாங்­கி­ய­தா­க­வும், ஷாருக்­கானைத் தொடர்­பு­கொண்டு 25 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி­ய­தா­க­வும் பிர­பா­கர் செயில் கூறி­யுள்­ளார். இதை­ய­டுத்து, அவர் பிறழ் சாட்­சி­யாக மாறி­விட்­டார் என்று போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு இந்த வழக்கை விசா­ரித்து வரும் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.

விசா­ரைண அமைப்­பின் மீதான நம்­பிக்­கையைச் சிதைக்­கும் நோக்­கத்­து­டன் பிர­பா­கர் குற்­றம்­சாட்டி இருப்­ப­தா­க­வும் கூறி­யுள்­ளது.

இதற்­கி­டையே, தேச­பக்தி என்ற பெய­ரில் பொய் வழக்­கு­கள் போடப்­பட்டு சிலர் பண­மோ­ச­டி­யில் ஈடு­ப­டு­வ­தாக சிவ­சேனா கட்­சி­யின் மூத்த தலை­வர் சஞ்­சய் ராவத் குற்றம்­சாட்டி உள்­ளார்.

போதைப் பொருள் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­யான ஷாம் டிசூசோ, மிகப்­பெ­ரிய அள­வில் பண மோச­டி­யில் ஈடு­படும் நபர் என்­றும் அவர் விமர்­சித்­துள்­ளார்.

ஆர்­யன் கான் வழக்­கில் முக்­கிய சாட்­சி­யாக சேர்க்­கப்­பட்ட பிர­பா­கர் போதைப்­பொ­ருள் தடுப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் ஷாருக்­கா­னி­டம் கோடிக்­க­ணக்­கில் பேரம் பேசி­ய­தாக கூறி­யுள்ள நிலை­யில், சிவ­சே­னா­வும் குற்­றம்­சாட்டி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!