ஆட்டோ ஓட்டுநருடன் ஓடிப்போன செல்வந்தரின் மனைவி

1 mins read
c32531c9-969b-4029-8d43-8577ca8d5215
வீட்டிலிருந்த 47 லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக்கொண்டு அப்பெண் தலைமறைவாகிவிட்டார். மாதிரிப்படம் -

போபால்: கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு உடைமையாளரான கணவரை விட்டுவிட்டு, தன்னைவிட 13 வயது குறைந்த கள்ளக்காதலனான ஆட்டோ ஓட்டுநருடன் பெண் ஒருவர் ஓட்டம் பிடித்த சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் நிகழ்ந்துள்ளது.

தன் மனைவியையும் வீட்டில் இருந்து 47 லட்ச ரூபாயையும் கணவில்லை என்று அப்பெண்ணின் கணவர் காவல்துறையில் புகார் அளித்த பின்னரே இவ்விவகாரம் வெளியில் தெரிந்தது.

அந்த ஆட்டோ ஓட்டுநர் அவ்வப்போது அப்பெண்ணை அவரது வீட்டில் இறக்கிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக முதற்கட்டத் தகவல்கள் கூறின. இம்மாதம் 13ஆம் தேதியில் இருந்து அப்பெண்ணைக் காணவில்லை.

இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணையும் ஆட்டோ ஓட்டுநரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அந்த ஆட்டோ ஓட்டுநரின் வயது 32 எனக் கூறப்பட்டது. அவரது வீட்டு முகவரி இன்னும் தெரியவில்லை.

இதனிடையே, அவரது நண்பரின் வீட்டில் இருந்து ரூ.33 லட்சத்தைக் காவல்துறை மீட்டுள்ளது. ஆனாலும், ஓடிப்போன இருவரும் இன்னும் பிடிபடவில்லை.

அப்பெண்ணின் கணவர்க்குக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.