புதுடெல்லி: லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவை கைது செய்ய வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.
இதற்கிடையே, உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவை எதிர்த்து போட்டியிடப் போவதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
இவரது தலைமையின் கீழ் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கங்கள் உள்ளன.
இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் கூறினார்.


