"மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும், பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி," என்ற தகவலுடன் சில புகைப்படங்களையும் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று பதிவேற்றியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
அண்மையில் 67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 70 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த்துக்கு திரைப்படத்துறையின் உயர்ந்த விருதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரைச் சந்தித்த புகைப்படங்களை டுவிட்டரில் பதிவுவேற்றம் செய்துள்ளார். அதற்கு ரசிகர்கள் பலர் மகிழ்ச்சி தெரிவித்து ரஜினிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

