மூன்று கோடி பேருக்கு தடுப்பூசி போட்டு மகாராஷ்டிரா சாதனை

மும்பை: இந்­தி­யா­வில் அதி­க­மா­கத் தடுப்­பூசி போட்­டுள்ள மாநி­லங்­களில் மகா­ராஷ்­டிரா முன்­னி­லை­யில் உள்­ளது.

இது­வரை அங்கு மூன்று கோடி பேருக்கு இரண்டு தவணை தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இதனை அந்த மாநில முதல்­வ­ரின் அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.

இது குறித்து முதல்­வர் அலு­வ­ல­கம் வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில், "இன்று மகா­ரஷ்­டிர மாநி­லம், நாட்­டி­லேயே அதி­க­பட்­ச­மாக மூன்று கோடி மக்­க­ளுக்கு முழு­மை­யாக கொரோனா தடுப்­பூசி செலுத்தி ஒரு புதிய மைல்­கல்லை தாண்­டி­யுள்­ளது.

"இது நம்­மு­டைய சுகா­தார அமைப்­புக்கு ஒரு மாபெ­ரும் சாத­னை­யா­கும்.

நாம் 'முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­பட்ட குடும்­பங்­கள், முழு­மை­யாக தடுப்­பூசி போடப்­பட்ட மராட்­டி­யம்' என்­னும் இலக்கை நோக்கி பய­ணித்து வரு­கி­றோம்." இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் நேற்­றைய நில­வ­ரப்­படி, இது­வரை 103 கோடி தடுப்­பூ­சி­கள் செலுத்­தப்­பட்­டுள்­ளன.

முன்­ன­தாக, தயக்­கம் காட்­டும் மக்­க­ளைத் தடுப்­பூசி போட வைப்­பது சவால்­மிக்­கது என்று மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் சுகா­தார அமைச்­சர் ராஜேஷ் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில், அம்­மா­நி­லம் தடுப்­பூசி செலுத்­து­வ­தில் இந்த புதிய மைல்­கல்லை எட்­டி­யுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

மராட்­டி­யத்­தில் தடுப்­பூ­சி­கள் செலுத்­தும் பணி­கள் முடுக்கி விடப்­பட்­டி­ருந்­தா­லும், தின­சரி கொரோனா பாதிப்பு ஆயி­ரத்­துக்­கும் மேலா­கவே பதி­வாகி வரு­கிறது. அங்கு நேற்று புதி­தாக 1,201 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இது­வரை மாநி­லத்­தில் 22,981 பேர் தொற்­றால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­வ­தாக அம்­மா­நில சுகா­தா­ரத்­துறை தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வி­லேயே உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லத்­தில்­தான் அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது.

அங்கு அக்­டோ­பர் 25 நில­வ­ரப்­படி இது­வரை (95 மில்­லி­யன் பேர்) முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 29 மில்­லி­யன் இரண்டு தவணை தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுள்­ள­னர். அதற்கு அடுத்­த­ப­டி­யாக

அதே காலக்­கட்­டத்­தில் இது­வரை இந்­தி­யா­வில் ஒரு பில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் அக்­டோ­பர் 26 நில­வ­ரப்­படி 52.3 விழுக்­காட்­டி­னர் (1.03 பில்­லி­யன்) முதல் தவணை தடுப்­பூ­சி­யும் 22.4 விழுக்­காட்­டி­னர் (310 மில்­லி­யன் பேர்) இரு தவ­ணைத் தடுப்­பூ­சி­யும் போட்­டுக்­கொண்­டுள்­ள­னர். இந்­தி­யா­விலே மகா­ராஷ்­டிராதான் தொற்­றால் ஆக அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்ட மாநி­லம். இங்கு இரண்டு நாட்­க­ளுக்கு முந்­தைய நில­வ­ரப்­படி, தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 6.6 மில்­லி­யன் பேர்.

அதற்­க­டுத்த நிலை­யில் கேரளா, கர்­நா­டகா ஆகிய மாநி­லங்­கள் உள்­ளன.

இந்­தி­யா­வில் கடந்த ஒரு வாரத்­தில் மட்­டும் 74,752 தொற்­றுப் பாதிப்­பும், 2,257 தொற்று மர­ணங்­களும் பதி­வா­கி­யுள்­ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!