பெங்களூரு: கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய். 4.2 என்ற உருமாறிய கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உலக அளவில் தற்போது பிரிட்டன், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏஒய். 4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் அதிக அளவில் உள்ளது. ஏஒய். 4.2 என்ற புதிய உருமாறிய கொரோனா தொற்று தற்போது பரவி வருகிறது. கடந்த சில மாதங்களில் 1,300 க்கும் மேற்பட்ட மாதிரிகளை மறு ஆய்வு செய்ததில், ஜூலை மாதம் சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகளில் இந்த புதிய வகை கிருமி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

