மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தித் திரையுலகின் முன்னணி நாயகன் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிணை வழங்கியது.
இம்மாதம் 3ஆம் தேதி கைது செய்யப்பட்டார் 23 வயதான ஆர்யன். சொகுசுக் கப்பலில் போதைப்பொருளுடன் விருந்து நடைபெற்றதாகக் கிடைத்த தகவலின்பேரில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது அவர் கைது செய்யப்பட்டார்.
இதற்குமுன் இருமுறை இவருக்குப் பிணை மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அர்பாஸ் மெர்ச்சன்ட், முன்முன் தமேச்சா ஆகியோருக்கும் பிணை வழங்கப்பட்டது.
இதனையடுத்து, அம்மூவரும் நாளை வெள்ளிக்கிழமை அல்லது நாளை மறுநாள் சனிக்கிழமை சிறையிலிருந்து விடுவிக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.


