மும்பை: போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட இரண்டு பிணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஆர்யன் தாக்கல் செய்த மூன்றாவது மனு மீது மூன்று நாள்கள் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் சிக்கியுள்ள மேலும் இருவரும் பிணை பெற்றுள்ளனர்.
அரசியல் மோதலையும் ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கின் முக்கிய சாட்சியாகக் கருதப்படும் கிரண் கோசாவி என்பவர் புனே நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யன் கானின் வழக்கறிஞர் ரோஹத்கி, வெள்ளிக்கிழமை பிணை உத்தரவு கிடைக்கும் என்றும் சனிக்கிழமைக்குள் ஆர்யன் கான் சிறையில் இருந்து வெளியே வருவார் என்றும் தெரிவித்தார்.

