அமெரிக்க ஆயுதங்களுடன் எல்லையில் இந்தியப் படை

அமெரிக்க ஆயுதங்களுடன் எல்லையில் இந்தியப் படை

1 mins read
812e99eb-48ca-4b40-9bb4-bb51c1f01254
-

புது­டெல்லி: இந்­தியா அதன் சீன எல்­லை­யில் படை­க­ளைக் குவித்­துள்­ளது. அண்­மை­யில் அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்து வாங்­கிய நவீன ஆயு­தங்­கள் அந்­தப் படை­யி­ன­ரி­டம் காணப்­பட்­ட­தாக புளூம்­பெர்க் செய்தி ஒன்று தெரி­விக்­கிறது.

சர்­சைக்­கு­ரிய இமாச்­ச­லப் பிர­தேச எல்­லைப் பகு­தியை உரிமை கொண்­டா­டு­வது தொடர்­பாக இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் பூசல் நீடிக்­கிறது. நாட்­டின் வட­கி­ழக்­கில் பூட்­டான், திபெத் அருகே உள்ள தவாங் பீட­பூமி தான் சர்ச்­சைக்­கு­ரிய நிலப் பகுதி. அத­ன­ரு­கில் இந்­தி­யப் படை­கள் குவிக்­கப்­பட்டு உள்­ளன. இந்­தி­யா­வின் கட்­டுப்­பாட்­டில் உள்ள இந்­தப் பகுதி தனக்­கு­ரி­யது என்று சீனா உரிமை கோரி வரு­வ­தால் சர்ச்சை நீடிக்­கிறது.

எந்த நேரத்­தி­லும் எத­னை­யும் சமா­ளிக்­கும் விதத்­தில் இந்­தியா நிறுத்தி இருக்­கும் படை­யி­ன­ரி­டம் நவீன ரக துப்­பாக்­கி­கள் உள்­ளன. அவை அமெ­ரிக்­கா­வில் தயா­ரிக்­கப்­பட்­டவை. மேலும், அமெ­ரிக்­கா­வில் தயா­ரிக்­கப்­பட்ட சினூக் ஹெலி­காப்­ட­ரை­யும் இந்­தி­யப் படை­யி­னர் பயன்­ப­டுத்­தத் தொடங்கி உள்­ள­னர். இவற்­று­டன் உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட அதி­வேக ஏவு­

க­ணை தாங்கி கப்­பல், புத்­தம் புதிய தொழில்­நுட்­பத்­து­ட­னான கண்­கா­ணிப்­புக் கரு­வி­கள் போன்­ற­வை­யும் கிழக்கு திபெத் எல்­லைப் பகு­தி­யில் காணப்­ப­டு­கின்­றன.

அமெ­ரிக்­கா­வுக்­கும் இந்­தி­யா­வுக்­கும் இடை­யி­லான தற்­காப்பு உறவு வலு­வ­டைந்­து வருகிறது.