புதுடெல்லி: பல்வேறு காலகட்டங்களில் கொள்ளைக் கும்பலால் திருடி, கடத்தி விற்பனை செய்யப்பட்ட ஏராளமான கலைப்பொருள்களை அமெரிக்கா இந்திய அரசாங்கத்திடம் திருப்பி ஒப்படைத்துள்ளது. அந்த கலைப்பொருள்
களின் மதிப்பு ரூ.112.21 கோடி ($15 மில்லியன்).
வியாழக்கிழமை நடைபெற்ற கலைப்பொருள் ஒப்படைக்கும் நிகழ்வில் இந்தியத் துணைத் தூதா் ரண்தீா் ஜெய்ஸ்வால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு விசாரணைக் குழுப் பொறுப்பாளா் எரிக் ரோசன்பிளாட் ஆகியோா் கலந்துகொண்டனா். 12ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சிவ நடராசரின் வெண்
கலச்சிலை உள்பட 248 கலைப்பொருள்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.
இவற்றில் 235 கலைப்பொருள்கள், சட்டவிரோத சிலை விற்
பனையாளா் சுபாஷ் கபூரிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை.
அவரும் அவருடைய கூட்டா ளிகளும் இந்தியா மட்டுமன்றி ஆப்கானிஸ்தான், கம்போடியா, இந்தோனீசியா, மியன்மார், நேப்பாளம், பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து சிலைகள் மற்றும் கலைப்பொருள்களை கடத்தி வந்துள்ளனா். அந்த கலைப்பொருள்கள், சுபாஷ் கபூருக்குச் சொந்தமான விற்பனைக்கூடத்தில் இருந்து வெவ்வேறு நபா்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.
அவா்களைக் கண்டறிந்து, விற்பனை செய்யப்பட்ட அந்தக் கலைப்பொருள்களை அமெரிக்காவின் மன்ஹட்டன் மாவட்ட சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா். இதுவரை இல்லாத அளவில், அதிக கலைப்
பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா இந்த முறை ஒப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.