திருவனந்த புரம்: கேரள மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தத் தகுதியான
18 வயதுக்கு மேற்பட்டவர் களில் 50 விழுக்காட்டினர் இரு தடுப்பூசி களையும் போட்டுக்கொண்டு விட்டனர். இதன்மூலம் கேரளா சாதனை நிகழ்த்தி உள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் (படம்) தெரிவித்து உள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட வர்களில் 94.58% பேர் (2,52,62,175) முதல் தவணை தடுப்பூசியைப் போட்டுள்ளனர். அவர்களில் 50.02% பேர் (1,33,59,562) இரு தடுப்பூசி களையும் போட்டுவிட்டனர்.
அதேநேரத்தில் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 77.37% பேர் முதல் தடுப்பூசியை யும் 33.39% பேர் இரு தடுப்பூசி களையும் போட்டுள்ளனர்.