புதுடெல்லி: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது.
அதற்கான நிபந்தனைகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஆர்யன் கான் பிணை பெற ரூ.1 லட்சம் மதிப்பிலான பத்திரம், அதே தொகைக்கு இணையாக ஒன்று மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பிணைத்தொகை செலுத்த வேண்டும்.
வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளுடன் தொடர்புகொள்ள முயற்சிக்கக்கூடாது,
சிறப்பு நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிக்குள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் போன்றவை ஆர்யன் கானுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்.

