தலைகீழாக தொங்க விட்டு தண்டனை

தலைகீழாக தொங்க விட்டு தண்டனை

1 mins read
64ed834b-5411-4ac3-b353-38f492f86834
-

மிர்­ஸா­பூர்: இரண்­டாம் வகுப்பு மாண­வன் ஒரு­வ­னைப் பள்­ளிக்­கூ­டத்­தில் தலை­கீ­ழா­கத் தொங்க­ விட்ட நிகழ்வு பெரும் அதிர்வு ­அலைகளை ஏற்­ப­டுத்தி வரு­கிறது. உத்­த­ரப் பிர­தேச மாநி­லம், மிர்­ஸா­பூர் மாவட்­டம், அஹ்­ரௌரா நக­ரி­லுள்ள ஓர் உயர்­ நிலைப்பள்­ளி­யில் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. சோனு யாதவ் என்ற அந்த மாண­வன் சாப்­பி­டும்­போது குறும்­புத்­த­னம் செய்­த­தால், பள்ளி முதல்­வர் மனோஜ் விஸ்­வ­கர்மா கோப­ம­டைந்­தார்.இத­னை­ய­டுத்து, சோனு­வின் ஒரு காலைப் பிடித்து, இரண்­டாம் தளத்­தில் இருந்து அவ­னைத் தலை­கீ­ழா­கப் பிடித்­துத் தொங்­க­விட்­டார். மற்ற மாண­வர்­க­ளின் முன்­னி­லை­யில் அவ­னுக்­குப் பாடம் கற்­பிப்­ப­தற்­காக அவர் அப்­ப­டிச் செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.