ஓவியம்போல் ஒரு கையெழுத்து
வயநாடு: கேரள மாநிலத்தில் எம்.கே. ஜெயன் எனப்படும் வட்டார வளர்ச்சி அதிகாரி வயநாட்டில் உள்ள மானந்தவாடி யில் அரசு அலு வலகத்தில் வேலை யில் சேர்ந்தார். இவர் கையெழுத்து ஓவியம்போல இருப்பது பலரையும் கவர்ந்தது. பறக்கும் பச்சைக்கிளி போன்ற ஓவியத்துடன் அவர் கையெழுத்திட்டு வருகிறார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவி நீட்டிப்பு
புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக் காலம் மேலும் மூன்றாண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு டிசம்பர் 10ஆம் தேதியுடன் அவரின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் 3 ஆண்டு களுக்கோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையிலோ சக்திகாந்த தாஸ் (படம்) ரிசர்வ் வங்கி ஆளுநராக செயல்படுவார்
என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொற்று குறைந்து மரணம் கூடியது
புதுடெல்லி: வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் இந்தியாவில் 14,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 342,46,157ஆக அதி கரித்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமையை விட சுமார் 2,000 குறைவு. அன்றைய தினம் 16,146 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 24 மணிநேரத்தில் 805 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாண்டுவிட்டனர். வியாழக் கிழமை 733 பேர் கொரோனாவால் இறந்த நிலையில் நேற்றைய இறப்பு எண்ணிக்கை 805ஆக அதிகரித்துள்ளது. இவர்களையும் சேர்த்து கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 457,191ஆனது.
உத்தரகாண்டில் 79 பேர் உயிரிழப்பு
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இம்மாதம் 17,18,19 தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 79 பேர் உயிரிழந்து விட்டதாக மாநில அரசு கூறியுள்ளது. இன்னும் மூவரின் கதி தெரியவில்லை. 24 பேர் காயமடைந்துள்ளனர். கனமழை யின் தாக்கம் உத்தரகாண்டின் பல பகுதிகளையும் பாதித்து இருந்த நிலையில் மீட்புப்படை மூலம் ஆபத்தான இடத்தில் வசிப்பவர்கள் பலர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

