வத்திகன்: 'ஜி-20' உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி சென்றுள்ள பிரதமர் மோடி வத்திகனில் போப் பிரான்சிஸைச் சந்தித்துப் பேசினார்.
இத்தாலி தலைநகர் ரோமில் இரண்டு நாள் ஜி-20 மாநாடு நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
வெள்ளிக்கிழமை காலை ரோம் நகர் வந்து சேர்ந்ததும் முதல் நிகழ்ச்சியாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர்லெயன் ஆகி யோரை அவர் சந்தித்தார்.
அப்போது இரு தரப்பு பொரு ளியல், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, கிருமித்தொற்று குறித்து அவர்கள் விவாதித்தனர்.
ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவின் செயல்பாடுகள், இந்தோ பசிபிக் வட்டாரத்தின் தற்போதைய சூழ்நிலை உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் ரோம் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 'ஜி-20' மாநாட்டிலும் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
பிரதமர் மோடியுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் சென்று உள்ளார்.