நடிகர் புனித் ராஜ்குமார் இறுதிச் சடங்கில் 500,000 பேர் திரண்டனர்

நடிகர் புனித் ராஜ்குமார் இறுதிச் சடங்கில் 500,000 பேர் திரண்டனர்

1 mins read
83e9a935-6f13-49c9-9c1a-cb026a64ea5a
-
Google News Preferred Icon

பெங்களூரு: புனித் ராஜ்குமாரின் இறுதிச்சடங்குகள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். பழம்பெரும் கன்னட நடிகர் ராஜ்குமாரின் இளைய மகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் (46) வெள்ளிக்கிழமை பெங்களூருவில் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி உடனடியாக கண்கள் தானம் செய்யப்பட்டன.

புனித் ராஜ்குமார் இறுதி நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் ஆகியோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அது முதல் நேற்று நள்ளிரவு வரை ஏராளமான ரசிகர்கள் வந்து அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

25 மணி நேரத்தில் புனித் ராஜ்குமார் உடலுக்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.