ஒரே இந்தியா, உன்னத இந்தியா

ஒரே இந்தியா, உன்னத இந்தியா

2 mins read
329ec37e-a6db-4349-9ddd-c72c877d4c87
-

பிரதமர் நரேந்திர மோடி: புதிய பாதையில் நாடு முன்னோக்கிச் செல்கிறது

புது­டெல்லி: சர்­தார் படே­லால் ஊக்­கம்­பெற்­றுள்ள இந்­தியா, உள்­ளே­யி­ருந்து மற்­றும் வெளி­யே­யி­ருந்து வரும் சவால்­களைச் சந்­திக்­கும் முழு­த் திறன் பெற்­ற­தாக மாறி­யுள்­ளது. முன் எப்­போ­தும் இல்­லாத வளர்ச்சி, சிர­ம­மான இலக்­கு­களை அடைந்­தி­ருப்­பது, சர்­தார் படே­லின் கன­வு­கள்­படி இந்­தியா கட்­ட­மைக்­கப்­ப­டு­கிறது என்று பிர­த­மர் நரேந்திர மோடி (படம்) கூறி­னார்.

தேசிய ஒற்­றுமை தினத்­தை­யொட்டி உரை­யாற்­றிய பிர­த­மர் நரேந்­திர மோடி நாட்டு மக்­க­ளுக்கு வாழ்த்து தெரி­வித்­துள்­ளார். இது­கு­றித்து அவர் கூறி­யுள்­ள­தா­வது:

தேவை­யற்ற சட்­டங்­களை நீக்­கி­யுள்­ளோம். ஒற்­று­மைச் சிந்­த­னை­கள் வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. போக்கு­வரத்­துத் தொடர்­பை­யும் அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பை­யும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளோம். அத­னால் புவி­யி­யல், கலா­சார ரீதி­யி­லான தூரங்­கள் குறைக்­கப்­பட்டு ஒன்­றி­ணைந்­துள்­ளோம்.

இன்று 'ஒரே இந்­தியா, உன்­னத இந்­தியா' என்ற உணர்வு வலு­வ­டைந்­தி­ருப்­ப­தால் சமூக, பொரு­ளா­தார, அர­சி­யல் சட்­டப்­ப­டி­யான ஒருங்­கி­ணைப்­பின் 'மகா யாகம் நடந்­து­கொண்­டி­ருக்­கிறது. நீர், நிலம், வான், விண்­வெளி ஆகி­ய­வற்­றில் நாட்­டின் உறு­தி­யும் திற­னும் முன் எப்­போ­தும் இல்­லாத வகை­யில் உள்­ளது.

தற்­சார்பு இந்­தியா இயக்­கத்­தின் புதிய பாதை­யில் தேசம் முன்­னோக்கிச் செல்­லத்­தொ­டங்­கி­யுள்­ளது. சுதந்­தி­ரத்­தின் 75வது ஆண்டு சகாப்­தத்­தில் 'அனை­வ­ரின் முயற்சி' என்­பது கூடு­தல் பொருத்­த­மு­டை­ய­தாக இருக்­கிறது. முன் எப்­போ­தும் இல்­லாத வளர்ச்சி, சிர­ம­மான இலக்­கு­களை அடைந்­தி­ருப்­பது, சர்­தார் சாகே­பின் கன­வு­கள்­படி இந்­தி­யா­வைக் கட்­ட­மைப்­பது என்­ப­தன் சகாப்­த­மாக சுதந்­தி­ரத்­தின் 75வது ஆண்டு உள்­ளது. சர்­தார் படே­லின் ஒரே இந்­தியா என்­ப­தன் பொருள் அனை­வ­ருக்­கும் சம வாய்ப்­பு­கள் என்­ப­தா­கும். ஒரே இந்­தியா என்­பது பெண்­கள், தலித் மக்­கள், நலி­வ­டைந்­த­வர்­கள், பழங்­கு­டி­யி­னர், காடு­களில் வாழ்­வோர் ஆகி­யோ­ருக்கு சம வாய்ப்­பு­கள் அளிக்­கும் இந்­தியா. எந்­த­வித பாகு­பா­டும் இல்­லா­மல், அனை­வ­ருக்­கும் வீட்­டு­வ­சதி, மின்­சா­ரம், குடி­நீர் ஆகி­ய­வற்றை எளி­தில் கிடைக்­கச்­செய்­வ­தா­கும். அனை­வ­ரும் முயற்சி செய்­வோம் என்­ப­தில் இதைத்­தான் நாடு செய்­து­வ­ரு­கிறது என்று பிர­த­மர் மோடி, தனது உரை­யில் கூறி­னார்.