நடிகர் புனித் ராஜ்குமார் இறுதிச் சடங்கில் 500,000 பேர் திரண்டனர்

நடிகர் புனித் ராஜ்குமார் இறுதிச் சடங்கில் 500,000 பேர் திரண்டனர்

1 mins read
126e978c-f0aa-4454-91c0-2ac9f753e17d
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நல்லுடல் வைக்கப்பட்டிருந்த காண்டீரவா மையத்திற்கு வெளியே கூடிய ஏராளமான ரசிகர் கூட்டம். அவரது இறுதி ஊர்­வ­லத்தைக் காண 500,000க்கும் மேற்­பட்­டோர் திரண்­ட­னர் என்று கூறப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

பெங்­க­ளூரு: புனித் ராஜ்­கு­மா­ரின் இறு­திச்­ச­டங்­கு­கள் 21 குண்­டு­கள் முழங்க முழு அரசு மரி­யா­தை­யு­டன் நடை­பெற்­றது.

பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் திரண்டு அஞ்­சலி செலுத்­தி­னர். பழம்­பெ­ரும் கன்­னட நடி­கர் ராஜ்­கு­மா­ரின் இளைய மக­னும், முன்­னணி நடி­க­ரு­மான புனித் ராஜ்­கு­மார் (46) வெள்­ளிக்­கி­ழமை பெங்­க­ளூ­ரு­வில் மார­டைப்­பால் கால­மா­னார். அவ­ரது விருப்­பப்­படி உட­ன­டி­யாக கண்­கள் தானம்­ செய்­யப்­பட்­டன.

புனித் ராஜ்­கு­மார் இறுதி நிகழ்ச்­சி­யில் முதல் அமைச்­சர் பச­வ­ராஜ் பொம்மை, எதிர்க்­கட்­சித் தலை­வர் டி.கே.சிவ­கு­மார், முன்­னாள் முதல் அமைச்­சர் எடி­யூ­ரப்பா உள்­ளிட்ட அர­சி­யல் தலை­வர்­கள், திரை உலக பிர­ப­லங்­கள் ஆகியோர் பங்­கேற்று அஞ்­சலி செலுத்­தி­னர்.

அது முதல் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு வரை ஏரா­ள­மான ரசி­கர்­கள் வந்து அவ­ரது உட­லுக்கு இறுதி அஞ்­சலி செலுத்­தி­னர்.

25 மணி நேரத்­தில் புனித் ராஜ்­கு­மார் உட­லுக்கு 6 லட்­சத்­துக்­கும் மேற்­பட்­டோர் நேரில் வந்து அஞ்­சலி செலுத்­தி­ய­தாக அங்கு பாது­காப்பு பணி­யில் ஈடு­பட்டு இருந்த காவல்­துறை அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.