காஷ்மீர் ஏரியில் மிதக்கும் திரையரங்கம்

ஜம்மு/காஷ்­மீர்: சுற்­றுப்­ப­ய­ணி­களை ஈர்க்­கும் வகை­யில் காஷ்­மீர் ஏரி­யில் ஏற்­கெ­னவே படகு வீடு­கள் உள்­ளன. இந்­தப் படகு வீடு­களில் உல்­லா­ச­மா­கப் பொழு­தைக் கழிக்க சுற்­று­லாப் பய­ணி­கள் அங்கு விரும்­பிச் செல்­வர். புகழ்­பெற்ற சுற்­று­லாத்­த­லங்­களில் ஒன்­றான காஷ்­மீ­ரில் சுற்­று­லாப் பய­ணி­க­ளுக்­காக அதி­க­மான பொழு­து­போக்கு இடங்­களை உரு­வாக்­கு­வ­தற்கு ஜம்மு-காஷ்­மீர் சுற்­றுலா மற்­றும் கலா­சா­ரத்­துறை நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறது.

அவ்­வ­கை­யில் மிதக்கும் திறந்­த­வெ­ளித் திரை­ய­ரங்கு ஒன்று அங்கு கட்­டப்­பட்­டுள்­ளது. சில நாட்­க­ளுக்­கு­முன் திறக்­கப்­பட்ட அந்­தத் திரை­ய­ரங்­கத்தை ஜம்மு-காஷ்­மீர் தலை­மைச் செய­லர் அருண் குமார் மேத்­தா­அண்­மை­யில் தொடங்­கி­வைத்­தார்.

திரை­ய­ரங்­கம் தொடங்­கப்­பட்ட முதல் நாளன்று 'காஷ்­மீர் கி காளி' என்­கிற இந்தி மொழிப் படம் திரை­யி­டப்­பட்­டது. இந்த திரை­ய­ரங்­கம் சுற்­று­லாப் பய­ணி­களை வெகு­வாகக் கவ­ரும் என்­றும், இங்கு சுற்­றுலா மேம்­படும் என்றும் ஜம்மு-காஷ்­மீர் சுற்­றுலா மற்­றும் கலா­சா­ரத்­துறை செய­லர் சர்­மத் ஹபீஸ் தெரி­வித்­தார்.

அவர் மேலும் கூறும்­போது, "மாலை நேரங்­களில் கூடு­த­லான பொழு­து­போக்கு நிகழ்ச்­சி­களை சுற்­று­லாப் பய­ணி­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். அதன் விளை­வால் உரு­வா­னதே இந்த மிதக்­கும் திரை­ய­ரங்­கத் திட்­டம் ஆகும்.

உல­கில் வேறு எங்­கும் இது­போன்ற மிதக்­கும் திறந்­த­வெளி திரை­ய­ரங்­கத்தைக் காணமுடியாது. இது காஷ்­மீர் சுற்­று­லாவை மேலும் பிர­ப­லப்­ப­டுத்தி அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்," என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!