டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்காத தமிழக ஆளுநர்

டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்காத தமிழக ஆளுநர்

1 mins read
db128f5c-2f18-4b7e-ba48-c28ec9895063
-

புது­டெல்லி: தமி­ழக ஆளு­நர் ரவி, இரண்டு முறை டெல்லி வந்து பிர­த­மர் உட்­பட பல தலை­வர்­க­ளைச் சந்­தித்து விட்­டார். ஆனால் ஆளு­நர், டெல்­லி­யில் உள்ள தமிழ்­நாடு இல்­லத்­தில் தங்­க­வில்லை என்று கூறப்­ப­டு­கிறது. இவர் முன்பு நாகா­லாந்து ஆளு­ந­ராக இருந்­தார். இத­னால், இவ­ருக்கு டெல்­லி­யில் அரசு ஒரு வீடு ஒதுக்­கியுள்ளது என்­றும் டெல்லி வந்தால் அங்­கு­தான் தங்­கு­கி­றார் என்­றும் கூறப்­ப­டு­கிறது. 'அழைத்­தால் மட்­டும் வந்­தால் போதும்' என ஆளு­நர் தரப்­பி­லி­ருந்து டெல்லி தமிழ்­நாடு இல்ல அதி­கா­ரி­க­ளுக்­குச் சொல்­லப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது. இத­னால் ஆளு­நர், யாரை, எப்­போது சந்­திக்­கி­றார் என்ற விவ­ரம் தமிழ்­நாடு இல்ல அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரி­யாது என்று தமி­ழ­கத் தக­வல்­கள் கூறு­கின்­றன.