கவுகாத்தி: தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை அடுத்து மாநிலங்கள், கொரோனா கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ் நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பட்டாசுகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் வெடித்துவிட வேண்டும் என்று கால நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியானாவில் 14 மாவட்டங்களில் பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த மாவட்டங்கள் டெல்லிக்கு அருகே உள்ளன. பிவானி, சர்கி தத்ரி, பரிதாபாத், குருகிராம், ஜஜ்ஜார், ஜிந்த், கர்னல், மகேந்திரகர்க், நுக், பல்வல், பானிபட், ரேவரி, ரோதக் மற்றும் சோனிபட் மாவட்டங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இணையம் மூலம் வாங்குவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளுக்குப் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பசுமைப் பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம், டெல்லியில் காற்றின் தரம் மோசமானதைத் தொடர்ந்து பட்டாசுக்கு அம்மாநிலம் தடைவிதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அரியானாவில் 14 மாவட்டங்களில் பட்டாசுக்குத் தடை
1 mins read
-

