இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் தமது கட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார் இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னட்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 'ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற மாநாட்டில்' பங்கேற்கச் சென்றிருந்தபோது இரு நாடுகளின் பிரதமர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை தனியாகச் சந்தித்துப் பேசினர்.
அதன் தொடர்பில் சமூக ஊடகத்தில் வெளியான ஒரு காணொளியில், "இஸ்ரேலில் பிரபலமான மனிதர் நீங்கள்தான். எனது கட்சியில் சேர்ந்துவிடுங்கள்," என்று இஸ்ரேல் பிரதமர் கூறுவதும் அதைக் கேட்டு மோடி வெடிச் சிரிப்பு சிரிப்பதும் இடம்பெற்றுள்ளது.

