புதுடெல்லி: நாடுமுழுவதும் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் கற்பித்துள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார். 14 மாநிலங்களில் மூன்று மக்களவைத் தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் அந்தந்த மாநிலத்தில் ஆளும் கட்சிகள் அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளன.
இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ''மூன்று மக்களவைத் தொகுதிகளில் 2ல் பாஜக தோல்வியடைந்துள்ளது. சட்டப்பேரவைகளில் காங்கிரசுடனான நேரடிப் போட்டியில் பாஜக பெரும்பாலான இடங்களில் தோல்வியடைந்துள்ளது. இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் முடிவுகள் இதற்கு சாட்சி. மக்கள் பாடம் கற்பித்துள்ளார்கள். மோடி அவர்களே ஆணவத்தைக் கை
விடுங்கள். மூன்று கறுப்புச் சட்டங்களை ரத்து செய்யுங்கள். பெட்ரோல்-டீசல் விலை உயர்வைக் கைவிடுங்கள். மக்களின் வேதனையை அலட்சியம் செய்வது தீங்கு விளைவிக்கும்," என்றார்.

