பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியதாக காங்கிரஸ் பெருமிதம்

பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியதாக காங்கிரஸ் பெருமிதம்

1 mins read
b5f7bb6a-8781-4bf8-9b5e-f8b23ddc7838
-

புது­டெல்லி: நாடு­மு­ழு­வ­தும் நடை­பெற்ற இடைத்­தேர்­த­லில் பாஜ­க­வுக்கு மக்­கள் பாடம் கற்­பித்­துள்­ள­தாக காங்­கி­ரஸ் செய்­தித் தொடர்­பா­ளர் ரண்­தீப் சுர்­ஜே­வாலா கூறி­யுள்­ளார். 14 மாநி­லங்­களில் மூன்று மக்­க­ள­வைத் தொகு­தி­கள் மற்­றும் 29 சட்­டப்­பே­ரவை தொகு­தி­க­ளுக்கு நடந்த இடைத் தேர்­த­லில் அந்­தந்த மாநி­லத்­தில் ஆளும் கட்­சி­கள் அமோக வெற்­றியை அறு­வடை செய்­துள்­ளன.

இந்த வெற்றி குறித்து காங்­கி­ரஸ் செய்­தித்­தொ­டர்­பா­ளர் ரண்­தீப் சுர்­ஜே­வாலா கூறு­கை­யில், ''மூன்று மக்­க­ள­வைத் தொகு­தி­களில் 2ல் பாஜக தோல்­வி­ய­டைந்­துள்­ளது. சட்­டப்­பே­ர­வை­களில் காங்­கி­ர­சு­ட­னான நேர­டிப் போட்­டி­யில் பாஜக பெரும்­பா­லான இடங்­களில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. இமாச்­சலப் பிர­தே­சம், ராஜஸ்­தான், கர்­நா­டகா, மகா­ராஷ்­டிரா ஆகிய மாநி­லங்­க­ளின் முடி­வு­கள் இதற்கு சாட்சி. மக்­கள் பாடம் கற்­பித்­துள்­ளார்­கள். மோடி அவர்­களே ஆண­வத்­தைக் கை

வி­டுங்­கள். மூன்று கறுப்­புச் சட்­டங்­களை ரத்து செய்­யுங்­கள். பெட்­ரோல்-டீசல் விலை உயர்­வைக் கைவி­டுங்­கள். மக்­க­ளின் வேத­னையை அலட்­சி­யம் செய்­வது தீங்கு விளை­விக்­கும்," என்றார்.