வயநாடு: கேரள மாநில வயநாடு மாவட்டத்தில் உள்ள கனியம்பேட்டா எனும் பகுதியைச் சேர்ந்த மிதுன் பாபு என்பவர் கடந்த மாதம் 30ஆம் ேததி கடவுச்சீட்டுக்கு உறை ஒன்றை இணையம் வழியாக வாங்கியிருக்கிறார்.
ஆனால் வீட்டுக்கு வந்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தால் அதில் கடவுச்சீட்டு உறையுடன் ஒரு உண்மையான கடவுச்சீட்டும் இருந்துள்ளது. இதனால் மிதுன் பாபு அதிர்ச்சி அயடைந்துள்ளார்.
உடனடியாக அமேசானின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவினரை தொடர்புகொண்ட மிதுன் பாபு, கடவுச்சீட்டு உறையுடன் உண்மையான கடவுச்சீட்டு வந்தது குறித்து தெரியப்படுத்தினார்.
ஆனால் வாடிக்கையாளர் சேவைப் பிரிவினர், உங்களுக்கு நேர்ந்தது போல மீண்டும் ஒரு முறை நடக்காது.
இது தொடர்பாக விற்பனையாளரிடம் தெரியப்படுத்தி கவனமாக இருக்குமாறு தெரிவிப்பதாகக் கூறி வைத்துவிட்டனர்.
கடவுச்சீட்டில் இருந்த தகவலின்படி, அது திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சாலிஹ் என்பவரின் கடவுச்சீட்டு என்பதை கண்டறிந்த மிதுன், சிரமப்பட்டு முகமது சாலிஹை தொடர்பு கொண்டு அவரது கடவுச்சீட்டு தன்னிடம் இருப்பதை தெரியப் படுத்தியிருக்கிறார். இதனால் மிதுன், விரைவில் கடவுச்சீட்டை முகமதுவிடம் ஒப்படைக்கவிருக் கிறர். கடவுச்சீட்டு எப்படி உறைக்குப் பதிலாக வந்தது என்று மிதுன் உட்பட பலருக்கும் புரியவில்லை.
மிதுனுக்கு வந்த உறையை முதலில் முகமது சாலேஹ் வாங்கியிருக்க வேண்டும்.
அதனை கடவுச்சீட்டுடன் பொருத்திப் பார்த்த பின்னர் பிடிக்காததால் கடவுச்சீட்டை எடுக்காமல் அவர் திருப்பியனுப்பிருக்கலாம்.
விற்பனையாளரும் கவனிக்காமல் அந்த உறையை அப்படியே மதன் பாவுக்கு அனுப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.