சண்டிகர்: ஹரியானாவில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அரவிந்த் சர்மா என்பவர், தங்கள் கட்சியின் முக்கிய தலைவரான மணீஷ் குரோவரை எதிர்ப்போரின் கண்களைத் தோண்டுவதுடன் கைகளையும் வெட்டப்போவதாக பேசியது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
அம்மாநில முன்னாள் அமைச்சர் மணீஷ் குரோவர், அமைச்சர் ரவீந்திர ராஜு உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் உத்தரகாண்ட்டின் கேதார் நாத்தில் உள்ள ஒரு கோயிலுக்குள் இருந்தனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவ சாயிகள் அந்தக் கோயிலை முற்றுகையிட்டனர். இதன் தொடர்பில் கருத்து தெரிவித்த போது அந்த உறுப்பினர் அவ்வாறு கூறினார்.