கொழும்பு: கனமழை காரணமாக இலங்கையில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவரைக் காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
அங்குள்ள 25 மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் சில தினங்களுக்கு பலத்த மழை எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளப்பெருக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த மழைப்பொழிவானது நாட்டின் வடக்கு கரையோரப் பகுதிகளுக்கு நகர்ந்து செல்லும் என்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.