திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலர், சவூதி அரேபியாவின் மெதினாவில் இருந்து ஜெட்டா நோக்கி காரில் சென்றபோது, ஒட்டகத்தின்மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது.
அதில், துவ்வூரைச் சேர்ந்த ரிஷாத் அலி என்ற 28 வயது இளையர் உயிரிழந்தார்.
இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த எழுவர் அந்த காரில் பயணம் செய்ததாகக் கூறப்பட்டது.
ரிஷாத் அலியின் மனைவி ஃபர்சீனாவும் ரம்லத், 52, என்பவரும் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். மற்ற நால்வர்க்கும் இலேசான காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள் உம்ரா பயணத்தை முடித்துவிட்டு, நாளை சொந்த ஊர் திரும்ப திட்டமிட்டு இருந்ததாகக் கூறப்பட்டது.
ஒட்டகங்கள் சாலையைக் கடந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் அவற்றில் ஒன்றின்மீது மோதியது.