ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்றுக் காலை நிகழ்ந்த விபத்தில் 12 பயணிகள் உடல் கருகி மாண்டனர். 22 பேர் காய
மடைந்தனர். பார்மெர் மாவட்டத்திலுள்ள பலோட்ரா நகரிலிருந்து தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பார்மெர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பச்பட்ரா என்ற பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, எதிரே, டேங்கர் லாரி ஒன்று வேகமாக வந்தது. இரண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின. மோதிய வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதில், பேருந்தில் இருந்த 12 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படு
கிறது. 22 பேர் படுகாயமடைந்தனர். இதுபற்றி போலிசாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அவர்கள், தீயை அணைத்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மீட்பு, உடனடி நிவாரணப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்திலிருந்து தப்பித்த பேருந்து பயணி ஒருவர் கூறும்போது, டேங்கர் லாரி வேகமாக வந்ததால் விபத்து ஏற்பட்டு பேருந்து தீப்பிடித்தது என்றார்.

