புதுடெல்லி: சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 'சத் பூஜா' பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆண்டுக்கு இருமுறை, நான்கு நாள்களுக்கு கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையின்போது பக்தர்கள் விரதம் மேற்கொள்கிறார்கள். பின்னர் பண்டிகை தினத்தன்று புத்தாடைகள், புதுப்பொருள்கள் வாங்கி, பூசை நடத்தி சூரியனை வழிபடுகிறார்கள். 8ஆம் தேதி தொடங்கிய 'சத் பூஜா', நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து டெல்லி பெண்கள் யமுனை நதிக்கரையோரம் கூடி, சூரியனை வழிபட்டனர். எனினும் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அவர்களை போலிசார் உடனடியாக திருப்பி அனுப்பினர்.
முழங்கால் அளவு தண்ணீரில் நின்று சூரிய வழிபாடு
1 mins read
-

