கொரோனா பிடியில் இருந்து இந்தியா விடுபட்டுவிட்டது

கொரோனா பிடியில் இருந்து இந்தியா விடுபட்டுவிட்டது

2 mins read
4c95e0a5-f483-4cc3-aaea-9fa68914fc8e
இந்தியாவில் அன்றாட புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஏறத்தாழ 20,000க்கு குறைவாகவே இருந்து வந்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

அமித்ஷா: மத்திய, மாநில அரசுகள் கூட்டாக போராடியதால் ஏற்பட்ட பலன்

புது­டெல்லி: கொவிட்-19 பிடி­யில் இருந்து இந்­தியா ஏறக்­கு­றைய விடு­பட்­டு­விட்­ட­தாக உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தெரி­வித்­தார். மத்­திய-மாநில அர­சு­கள் கூட்­டாக போரா­டி­யதே இதற்­கான கார­ணம் என்று ஆளு­நர்­கள் மாநாட்­டில் ஆற்­றிய உரை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

புது­டெல்­லி­யில் அதி­பர் மாளி­கை­யில் வியாழக்கி­ழமை நடந்த 51வது ஆளு­நர்­கள் மாநாட்­டில் உரை யாற்­றிய அமைச்­சர், கொரோனா வுக்கு எதி­ராக பிர­த­மர் மோடி தலை­மை­யில், மாநி­லங்­க­ளு­டன் இணைந்து, 'ஒரே நாடு, ஒரே மக்­கள், ஒரே மனம்|' என்ற சிந்­த­னை­யு­டன் போராடி மத்­திய அரசு வெற்றி கண்­டுள்­ளது என்­றார்.

மாநில முதல்­வர்­க­ளு­டன் பிர­தமர் 20 ஆலோ­ச­னைக் கூட்­டங்­களை நடத்­தி­ய­தா­க­வும் இந்­தியா எப்­படி போரா­டி­யது என்­பதை பார்த்து உல­கமே பாராட்­டி­ய­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

நாட்­டில் 110 கோடி தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு அந்த பலத்­து­டன் கொரோனா பிடி­யில் இருந்து நாடு ஏறத்­தாழ விடு­பட்டுவிட்­ட­தாக அமைச்­சர் அமித்ஷா குறிப்­பிட்­டார்.

இத­னி­டையே, வீடு வீடா­கச் சென்று கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­யைப் போடும் இயக்­கத்­தைத் தீவி­ரப்­ப­டுத்­தும்­படி மத்­திய அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா மாநில சுகா­தார அமைச்­சர்­களை வலி­யு­றுத்­தி­னார்.

இதற்­கா­கவே 'ஒவ்­வொரு வீட்டை­யும் தத்­தெ­டுங்­கள்' ஒரு என்ற திட்­டத்தை இந்­தியா தொடங்கி இருக்­கிறது.

இந்­தி­யா­வில் இன்­ன­மும் 12 கோடி பேர் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளா­ம­லேயே இருக்­கி­றார்­கள் என்று குறிப்­பிட்ட அவர், இது கவலை அளிக்­கிறது என்­றார்.

நாடு முழு­வ­தும் 110 கோடிக்­கும் மேற்­பட்ட தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு சாதனை படைக்­கப்­பட்டு இருக்­கிறது என்­றா­லும் இதில் மெத்­த­னம் கூடாது என்று மாநில சுகா­தார அமைச்­சர்­க­ளிடம் அவர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இந்­தி­யா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 12,516 பேருக்­குத் தொற்று ஏற்­பட்­ட­தா­க­வும் 501 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தா­க­வும் வெள்­ளிக்­கி­ழமை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கொவிட்-19 கார­ண­மாக மொத்­தம் 462,690 பேர் மாண்­டு­விட்­ட­தாக தக­வல்­கள் கூறின.