துவாரகா: குஜராத் மாநிலத்தின் துவாரகா மாவட்டத்தில் ரூ.300 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்பில் மூன்று பேரைக் கைது செய்து போலிஸ் தீவிர விசாரணை நடத்துகிறது.
குஜராத் மாநிலத்துக்கு கடல் வழியாக பெருமளவு போதைப் பொருள் கடத்தி வருவது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குஜராத் துறைமுகத்தில் சில வாரங்களுக்கு முன்பு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தி பலரையும் கைது செய்து அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில், ரூ.88.25 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் சஜ்ஜத் கோஷி, 44, என்பவர் சிக்கினார். அதையடுத்து சலீம் யாகூப் கரா, அலி யாகூப் கரா என்ற சகோ தரர்கள் கைதாயினர்.
அவர்களிடம் எஞ்சிய போதைப் பொருட்கள் பிடிபட்டதாகவும் விசாரணை நடப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

